Monday , December 10 2018
Home / Sri Lanka News (page 9)

Sri Lanka News

Sri lanka News

பிரதமர் வேட்பாளராக ரணிலின் மனைவி!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் மத்தியில் பிரதமர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்கிரமசிங்க களமிறக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த யோசனையை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தமது தேர்தல் செயற்பாடுகளுக்காக …

Read More »

மைத்திரியை போட்டுத் தாக்க தயாராகியது அமெரிக்க அரசு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஓர் அங்கமாக நேற்று அமெரிக்கக் காங்கிரஸிடம் இருந்து காரசாரமான அவசர கடிதம் ஒன்று மைத்திரிபாலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு …

Read More »

மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்!

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கவும், கலைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தின் …

Read More »

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது : ஜேர்மனி கவலை

இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதால் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது மேலும் இந்த நடவடிக்கை நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முழுமையாக செயற்படும் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் அவசியமான தூண்களில் ஒன்று. ஜனநாயக இலங்கையின் நீண்ட நாள் ஆதரவாளர் என்ற …

Read More »

தனியார் பஸ் மீது கல் வீச்சு !

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது கற்காளால் தாக்குதல் நடத்தி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் – பங்கதெனியா பகுதியிலேயே குறித்த தாக்குதல் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கிலக்கான பஸ்ஸின் கண்ணாடி நொறுங்கியதோடு பயணி ஒருவரும் சிறு காயங்கிற்கு இலக்காகியுள்ளார். காயத்திற்குள்ளானவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று சென்றுள்ளதாகவும், குறித்த அசம்பாவிதத்திற்கான காரணங்கள் அறியப்படவில்லை எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலாபம் பொலிசார் தெரிவிக்கின்றனர். Share4+1TweetSharePin4 …

Read More »

தாழமுக்கம் சூறாவளியாகும் சாத்தியம்: எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிகளில் சூறாவளி ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது Share3+1TweetSharePin3 Shares

Read More »

நாடாளுமன்றம் கலைப்பு ஜனநாயகப் படுகொலை!

திமுகவின்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், “இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயகப் பச்சைப் படுகொலையாகும். இதனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் இந்திய மத்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் …

Read More »

மைத்திரியின் செயலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனங்கள்!

இந்தியா

இலங்கையின் அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனநாயகக் கட்டமைப்பின் கீழ் இலங்கையில் நீதியான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புவதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் பிரிட்டனின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் …

Read More »

இலங்கையின் நிலமை உன்னிப்பாகக் கண்காணிக்கும் ஐ.நா.

இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கின்றது என்று கண்காணிக்கப் போவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கீடம், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும், இது தொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான அரசமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் …

Read More »

கூட்டுச் சதியை ஓரணியில் நின்று தோற்கடிப்போம்!

அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு கலைத்தவுடன் அலரிமாளிகையில் அவசரமாக ஒன்றுகூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர். இவர்கள் தற்போதும் அலரிமாளிகையில் தங்கியிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். “துரோகி துரோகி மைத்திரி துரோகி!”, “மைத்திரியே உனக்கு மன்னிப்பே …

Read More »