Breaking News
Home / இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா மீண்டும் போட்டி!

சிறிசேனா

இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிட இருப்பதாக இலங்கை சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கப்படும் எனவும் தேர்தல் ஆணையக்குழு அறிவித்திருந்தது. இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் சார்பாக மகிந்த ராஜபக்சேயின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா …

Read More »

இலங்கை அதிபர் தேர்தல் – ஐ.தே.க சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் போட்டி

சஜித்

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே, திசநாயகே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய அதிபரை தேர்வுசெய்வதற்கான தேர்தல், நவம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் சிறிசேனா மீண்டும் போட்டியிடுகிறார். ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் ராஜபக்சே-வின் …

Read More »

பிள்ளையாரின் தீர்த்தக்கேணி அருகில் தேரரின் உடல் தகனம்

முல்லைத்தீவு, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று நண்பகல் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி தமிழ் மக்களைப் பொலிஸார் தடுக்க நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகாமையில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் பிற்பகல் தகனம் செய்யப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் …

Read More »

பலாலி விமான நிலையம் ஒக்டோபர் 15 இல் திறப்பு!

பலாலி

– அன்றே இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பம் பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. எளிமையான வகையில் நடக்கவுள்ள இந்தத் திறப்பு விழா நிகழ்வை அடுத்து, இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. பலாலி விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டம் நேற்றுக் காலை அலரிமாளிகையில் நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமானப் …

Read More »

இலங்கை வனப்பகுதியில் காட்டுத்தீ: காரணம் என்ன?

இலங்கை

அமேசான் காட்டுத்தீ குறித்து நாம் கவலைக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கையிலுள்ள பிரதான வனப் பகுதியிலும் காட்டுத்தீ பரவி பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி திகழ்கின்றது. இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எல்ல சுற்றுத்தளம் ஈர்க்கின்றமை விசேட அம்சமாகும். குறிப்பாக அந்த பகுதியின் மலைத்தொடரும், அங்கு நிலவும் குளிர்ச்சியான வானிலையும் அனைவரும் ரசிக்கும் …

Read More »

சு.கவில் இணையுமாறு கோட்டாவுக்கு அழைப்பு

இணையுமாறு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையுமாறு மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார். “ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை கோட்டாபய ராஜபக்ச இன்னமும் பெறவில்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் குறித்து அவருடன் நாம் பேச்சு நடத்துவோம். எமது பக்கத்திலும் …

Read More »

இலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்

யானை

உடல்நலம் குன்றி, மெலிந்துபோன வயதான பெண் யானை ஒன்றை பௌத்த உற்சவத்தில் பங்கேற்க வைத்தது சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதை நேர்த்திக்கடன் செலுத்தவே உற்சவத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், இனிவரும் காலங்களில் அதை உற்சவங்களில் பங்கேற்க வைப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் யானை உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது போல் இந்த யானை உற்சவத்தில் 10 தினங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படவில்லை என்று அதன் உரிமையாளர் கூறியிருக்கிறார். இந்த நிலையில், …

Read More »

தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் – ரெலோ கிளி மாவட்ட அமைப்பாளர் ச.கீதன் கோரிக்கை.

ரெலோ கிளி மாவட்ட அமைப்பாளர் ச.கீதன்

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவாக நிலவி வரும் வறுமையை ஒழிக்க தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதோ அல்லது ஏற்படுத்திக் கொடுப்பதோ தான் சிறந்த தீர்வு என நம்புவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தான் கஞ்சா,கசிப்பு போன்ற சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது இதனால் இளைஞர்களின் வாழ்க்கை முறைகள் மாற்றம் பெறுகின்றன எமது பன்னாட்டு விழுமியங்கள் மறந்து …

Read More »

இலங்கை அதிபர் வேட்பாளர் அறிவிப்பு! என்ன ஆச்சு ராஜபக்சே?

இலங்கை

இலங்கை அதிபர் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் இலங்கை பொது ஜன பெரமுன கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த முறை இக்கட்சியின் சார்பில் மகிந்தா ராஜபக்சே போட்டியிட்ட நிலையில் இந்த முறை அவருடைய சகோதரர் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கொழும்புவில் நடைபெற்ற இந்த கட்சியின் தேசிய மாநாட்டில் இந்த முடிவு …

Read More »

என்.ஐ.ஏ. விரைவில் இலங்கை சென்று விசாரணை நடத்த திட்டம்

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக, அங்கு சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.ஐ.ஏ. அமைப்பிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கி நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, வெளிநாடுகளுக்கும் சென்று, இந்தியர்கள் தொடர்புடைய குற்றங்கள், இந்தியா மீது நடத்தப்பட உள்ள தாக்குதல்கள், அதற்கான சதி, இன்னும் பிற குற்றங்களை விசாரிக்க, என்.ஐ.ஏ.,வுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இதுவரை, வெளிநாடுகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ள …

Read More »