Breaking News
Home / இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

இலங்கைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் : இந்திய புலனாய்வுத்துறை உறுதி

இந்திய

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெறலாம் என்ற இரண்டாவது முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்த இந்தியாவின் புலனாய்வு பிரிவினரே மறுபடியும் எச்சரிக்கையை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பேருவளை, வெளிகம, தர்கா நகர் போன்ற பிரதேசங்களில் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற எச்சரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் …

Read More »

சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை!

யாழ்பாண விமானநிலையம்

35 ஆண்டுகளுக்குப் பின் சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை! மக்கள் வரவேற்பு சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக நேரடி விமான சேவை இன்று தொடங்கப்பட்டதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக திருச்சி, மதுரையில் இருந்தும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 1940-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி பகுதியில் ஆங்கிலேயர்கள் விமானப் படைத் தளம் அமைத்தனர். 1948-ம் ஆண்டு இலங்கை …

Read More »

சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடக்கம்!

சென்னை-யாழ்ப்பாணம்

36 ஆண்டுகளுக்கு பின் சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடக்கம்! சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடந்த 1983ம் ஆண்டு வரை விமான சேவை இயங்கி வந்த நிலையில் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தவுடன் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து 36 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்தபோது …

Read More »

சனிக்கிழமை நாடு திரும்பும் சந்திரிகா

சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பவுள்ளார். நாடு திரும்பியதும் உடனடியாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களை ஒன்றுதிரட் மொட்டுக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மொட்டுவுடன் இணைந்து கொண்டமைக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மொட்டுவுடன் இணைந்து கொண்டமைக்கு கடுமையான எதிர்ப்பை வௌியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க …

Read More »

யாழ் விமான நிலையம்; அரசியல் நடவடிக்கை குறித்து எச்சரிக்கை

யாழ் விமான நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களை அடைவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சி.அமல்ராஜ் கருத்து வெளியிடுகையில், தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தை அரசியல்வாதிகள் எவரும் தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்திக்கொண்டால், அது …

Read More »

இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா மீண்டும் போட்டி!

சிறிசேனா

இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிட இருப்பதாக இலங்கை சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கப்படும் எனவும் தேர்தல் ஆணையக்குழு அறிவித்திருந்தது. இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் சார்பாக மகிந்த ராஜபக்சேயின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா …

Read More »

இலங்கை அதிபர் தேர்தல் – ஐ.தே.க சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் போட்டி

சஜித்

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே, திசநாயகே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய அதிபரை தேர்வுசெய்வதற்கான தேர்தல், நவம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் சிறிசேனா மீண்டும் போட்டியிடுகிறார். ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் ராஜபக்சே-வின் …

Read More »

பிள்ளையாரின் தீர்த்தக்கேணி அருகில் தேரரின் உடல் தகனம்

முல்லைத்தீவு, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று நண்பகல் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி தமிழ் மக்களைப் பொலிஸார் தடுக்க நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகாமையில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் பிற்பகல் தகனம் செய்யப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் …

Read More »

பலாலி விமான நிலையம் ஒக்டோபர் 15 இல் திறப்பு!

பலாலி

– அன்றே இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பம் பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. எளிமையான வகையில் நடக்கவுள்ள இந்தத் திறப்பு விழா நிகழ்வை அடுத்து, இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. பலாலி விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டம் நேற்றுக் காலை அலரிமாளிகையில் நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமானப் …

Read More »

இலங்கை வனப்பகுதியில் காட்டுத்தீ: காரணம் என்ன?

இலங்கை

அமேசான் காட்டுத்தீ குறித்து நாம் கவலைக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கையிலுள்ள பிரதான வனப் பகுதியிலும் காட்டுத்தீ பரவி பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி திகழ்கின்றது. இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எல்ல சுற்றுத்தளம் ஈர்க்கின்றமை விசேட அம்சமாகும். குறிப்பாக அந்த பகுதியின் மலைத்தொடரும், அங்கு நிலவும் குளிர்ச்சியான வானிலையும் அனைவரும் ரசிக்கும் …

Read More »