Breaking News
Home / தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மலர்ந்த மலர்கள்

மலர்ந்த மலர்கள்

“மலர்ந்த மலர்கள்….” மலர்ந்த மலர்களையே மலர்மாலை தொடுத்தே மனமார விற்கையிலும் மதியையும் விதி வெல்லுதே…. வயிற்றுப் பசியிலே வழியின் ஓரமாய் வாடியே தூங்கிவிட்டேன் வழிநடத்த ஆட்களின்றி…. பதினாறு செல்வங்களை படைத்த இறைவனும் பாதியும் தராமலே பரிதவிக்க ஏன் விட்டாயோ….. இறைவனும் படைத்தானே இவ்வுலகில் வாழ்ந்திடவே இளமையில் வறுமையும் இனிமையான விசமாகுதே…. வாடிக்கையாளரோ சிலர் – ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களோ பலர்…. மாறுமோ தலைவிதி மன்னன் மாறினாலும்….. குறிப்பு :- வலிகளைச் …

Read More »

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா வெளிச்சம் போட்டுக் காட்டியது வெட்டி பந்தா தேசத்தினை தோல்வியென்று சொல்வதற்கு நான்கு நாட்கள் ஆனதிங்கே நாங்கள் இறங்கி செய்திருந்தால் பிஞ்சுப் பிள்ளை வந்திருப்பான் நீங்கள் வந்த பிறகு தானே நூறடிக்கு சென்றுவிட்டான் உங்கள் பிள்ளை விழுந்திருந்தால் ஊளையிட்டு ஓடிவரும் ஊரெல்லாம் கூடிவிடும் எங்கள் பிள்ளை விழுந்ததாலே எடுக்காம நடிக்கிறீங்க மணியன்கலிய மூர்த்தி

Read More »

அம்மா இருக்கேண்டா எஞ்செல்லம்

அம்மா இருக்கேண்டா எஞ்செல்லம்

அம்மா இருக்கேண்டா எஞ்செல்லம் அம்மா இருக்கேண்னு ஆறுதல் நீ கூறினாயே ஆசப்புள்ள குழிக்குள்ள அழுகையோடு நீ வெளிய என்ன தாயி பாவஞ்செஞ்ச இப்படி ஓர் பிள்ளைப்பெற ஆண்பிள்ளை பெற்றெடுத்து ஆழ்கிணறில் கொடுத்துட்டியே சுரந்த பால் சொல்லியழும் சொந்த மகன் எங்கேவென சொந்தமெலாம் கூடியழும் சின்னப்புள்ள போயிட்டானேன்னு பசுமாடும் கிடை ஆடும் கூட்டுக்கோழி கூட வந்து தோழனெங்கே கேட்கும்போது என்ன சொல்லி தேத்த போற. நாங்க என்ன பாவஞ்செய்தோம் ராப்பகலா அழுதுகொண்டே …

Read More »

கண்ணீர் விட்டு கதறுகிறேன்

கண்ணீர் விட்டு கதறுகிறேன்

கண்ணீர் விட்டு கதறுகிறேன் பத்து மாசம் சுமந்து பெத்த பாசத்தாயி கதறுறா பாசங்கொடுத்து பறிகொடுத்த பாவிதந்தை அழுவுறான் அழுது புலம்பும் அண்ணன் அங்கே என்ன செய்ய எம்புதல்வா ஏக்கத்தோடு காத்திருந்தோம் ஏமாற்றி போய்விட்டாயே நீயில்லா வீடு நிலமில்லா வீடு நீயில்லா பொழுது நிரைகனவு பொழுது நீயில்லா வாழ்வு எப்படி நான் போகப் போறேன் நீ குடிச்ச பால்புட்டி பரிதவித்து நிக்கிதடா நீ நடந்த கால் தடங்கள் அழியாம இருக்குதடா எஞ்செல்லம் …

Read More »

“விடை கூறாயோ இறைவா….”

"விடை கூறாயோ இறைவா...."

“விடை கூறாயோ இறைவா….” அகிலத்தைப் படைத்தே அதிலே புதைத்து நீயும் அமைதியாய் இருப்பதேனோ…. அம்மா அழுவதும் கேட்கவில்லையே…. பூமாதேவி தாயே உன்னையே கண்ணீரோடு கேட்கின்றேன் உன் மடியில் கவனமாகச் சுமந்தே பெற்றெடுத்த அன்னையிடமே மீட்டுக் கொடுத்துவிடு…. மீண்டும் இதுபோல் நடக்காமல் என்றும் விழித்திருங்கள் உறவுகளே…. இன்றைய நிலைமை இனிமேலும் வேண்டாம்…. தாய் மடிமீது மீண்டும் சேய் பிரசவிக்கப் பிரார்த்தனை செய்கின்றோம் இறைவா…. மீண்டும் மீட்டுக் கொடுத்துவிடு….  

Read More »

“இனியும் மாறுமா உலகு….”

இனியும் மாறுமா உலகு

“இனியும் மாறுமா உலகு….” நாட்டிலுள்ள குப்பைகளை துப்பரவு செய்யவது போல் குழிகளையும் கவனித்து சீர் செய்ய வேண்டும்.. பெற்றோர்களும் பிள்ளைகள் மீது கவனமாக இருக்க வேண்டும்.. ஓரளவு உயிராபத்தைத் தடுக்க முடியும். குறிப்பாக :- பிள்ளைகளைப் பெற்று வீதிகளிலும் குப்பைக் கூடங்களிலும் வீசுபவர்களும் இந்தத் தவிப்பைப் பார்த்து பிள்ளைகளைப் பாதுகாத்தல் வேண்டும்.. வேதனைப்படவும், பிரார்த்தனை செய்யவும் மட்டும்தான் முடிகின்றது….

Read More »

“வந்த மண்ணிலும் சொந்தக் குரல்….”

வந்த மண்ணிலும் சொந்தக் குரல்

“வந்த மண்ணிலும் சொந்தக் குரல்….” தரணியின் மண்மீதிலும் தயவான சொற்களோடே தன்மானம் காத்திடுமே தமிழனின் மொழியாகுமே….. சொந்தக்குரலிலே நானும் சோகத்தையே வார்த்தையிலே சொல்லியே வாழந்திடுவேன் சோதனையில் சாதனையாகவே….. மண்போற்றும் மானிடரே மறக்காமல் கேட்டிடுவீர் மானங்கெட்ட மனிதரிடம் மனிதநேயம் எங்கேயென…. வாழ்வான வாழ்வுதனை வாழாமல் அலைபவனை வாழ்க்கையென்னும் பாதையிலே வாழவழி காட்டிடுவீர்….. நம் சுவாசமும் தமிழ் பேசுமே நாமாக நாமிருந்தே நன்மைகள் விதைத்துவிட்டு நம் மொழியை நாம் காப்போம்….. நீர்வையூர், த.வினோத்.. …

Read More »

வெளிநாட்டு மாப்பிள்ளை

வெளிநாட்டு மாப்பிள்ளை

வெள்ளைத் தோல் என்றாள் வெளுத்ததெல்லாம் பால் என்றாள் கொள்ளை அழகு என்றாள்… வெளிநாட்டு மாப்பிள்ளையாம்… ஓலைக் குடியில் வாழ்ந்தவள்.. சேலை மறந்தாள்…… சாலையில் காலையும் மாலையும் குட்டைப் பாவாடையில் கும்மாளம் அடித்தாள்….. அலிசேஷன் நாயுடன் அங்காடிக்கு வந்தாள்…. ஊர்நாய்களை கண்டே உதட்டைச் சுழித்தாள்…. தலைமுடி சுருட்டினாள்….. இங்கிலீசில் வெருட்டினாள்…. அதிகாலை வரை அலைபேசியில் SMS உருட்டினாள்……. தனிமையில் சிரித்தாள்.. தாயையும் முறைத்தாள்… ஹை – ஹீல்ஸ் போட்டு ஸ்கூட்டரில் முறுக்கினாள்…. …

Read More »