Wednesday , October 17 2018
Home / Tamil Nadu News (page 3)

Tamil Nadu News

Tamil Nadu News

ஆண்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது

ஆண்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பெண்கள் கூறக்கூடாது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து …

Read More »

மாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா !

சென்னை சென்ட்ரல் வந்த ரயிலின் பெட்டியில் இருந்து 40 கிலோ கஞ்சா காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த தன்பாத் – ஆலப்புழா விரைவு ரயிலில் கடத்தி‌வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். கேரளாவிலிருந்து அதிகாலை ஒன்ற‌‌ரை மணியளவில் வந்த தன்பாத் ஆலப்புழா ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி முன் கேட்பாரற்று கிடந்த 4 பைகளை ரயில்வே காவல்துறையி‌னர் கண்டெடுத்தனர். யாரும் அந்த …

Read More »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு…களமிறங்கியது சிபிஐ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். கடந்த மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களும் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக கொலை முயற்சி, …

Read More »

கடலுக்குத் திரும்பிய மீனவர்கள் !

கடலுக்குத்

வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப்பெற்றதையடுத்து நாகை, காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், கடற்கரை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 10 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த கோரிக்கைகளுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நடந்த நாகை காரைக்கால் …

Read More »

சென்னையில் 15 வயது பெண் பலாத்காரம்

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த 15 வயது பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ய இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சென்னையிலுள்ள திருவான்மியூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு 15வயது மகள் உள்ளார். இவர் அருகே உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டருகே இருந்த கடைக்கு சென்று வரும் பொழுது அங்கே மளிகை கடையில் வேலை …

Read More »

சரக்கு வேனில் ரகசிய அறை… கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

ஆந்திராவில் சினிமா பாணியில் சரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து செம்மரங்களை கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குக்கல் தொட்டி அருகே அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதி-கடப்பா சாலையில் வந்து கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 8 செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாருக்கும் சந்தேகம் …

Read More »

திருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தையின் உடல் நாயிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார்நகர் வலம்புரி விநாயகர் ஆலயம் பகுதியில் நேற்று மாலை நாய் ஒன்று, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் சிசுவை வாயில் கவ்விக்கொண்டு வந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தடிகள் கொண்டு நாயை விரட்டிய நிலையில் சிசு உயிரிழந்த …

Read More »

திருமண ஆசையால் வாலிபர் செய்த வெறிச்செயல்

விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் கந்தன்(65). இவரது மனைவி பொடி(60). இவர்களுக்கு கோபி (35) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கோபி தனது பெற்றோரிடன் தனக்கு வயதாகிக்கொண்டே போவதாகவும் விரைவில் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் வற்புறுத்தியுள்ளார். அவரின் பெற்றோரும் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் ஜாதகம் …

Read More »

அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் –மி டூ குறித்து கமல் கருத்து

தமிழக முதல்வர்

பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் இந்தியன் மி டூ குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாஸ்ன் பதிலளித்துள்ளார். பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி இந்தியன் மி டூ வினை ஆரம்பித்து வைத்தார். இதையடுத்து இந்தியா முழுவதும் பல பாலியல் புகார்கள் வெளிவர ஆரம்பித்தன. தமிழ் நாட்டில் சின்மயி இணையதள விமர்சகர் பிரஷாந்த் மற்றும் தனது நெருங்கிய உறவினர்கள் …

Read More »

விஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருட்டு

தேமுதிக பொதுச்செயலளார் விஜயகாந்த் வீட்டிலிருந்து 2 பசுமாடுகள் திருடப்பட்டுள்ளது. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை, ஐயப்பன் தாங்கலை அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அவ்வீட்டின் பாதுகாப்பு பணியில் இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வீடு கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த வீட்டில் விஜயகாந்தின் 3 …

Read More »