Home / Tamil Nadu News (page 4)

Tamil Nadu News

வைகோவுடன் இணைந்து போராட தயார்: நாஞ்சில் சம்பத்

மதிமுக, அதிமுக, தினகரன் அணி என கடந்த சில வருடங்களில் கட்சிகள் மாறி மாறி அரசியல் செய்து கொண்டிருந்த நாஞ்சில் சம்பத், சமீபத்தில் தினகரன் அணியில் இருந்து விலகினார். தினகரன் கட்சியில் திராவிடம் இல்லை என்பதற்காகவே அவர் விலகியதற்கு காரணமாக கூறப்பட்டது. மேலும் இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை, தமிழுக்கு தொண்டு செய்ய போவதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ என்ற படத்தில் அவருடயை …

Read More »

தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது: வைகோ குற்றச்சாட்டு

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது- அண்ணா மறைவுக்கு பிறகு தி.மு.க.வை கண்ணை இமை காப்பது போல் காத்து வரும் கலைஞருக்கு இன்று 95-வது பிறந்த நாள். அவரை மனமார வாழ்த்துகிறேன். அவரது கணீர் குரல் மீண்டும் ஒலிக்க இயற்கை அன்னையை பிரார்த்திக்கிறேன். காவிரி மேலாண்மை வாரியத்தை அரசிதழில் வெளியிட்டது வெற்றி என முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் …

Read More »

தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து நக்மா அதிரடி நீக்கம்

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலராக, நடிகை நக்மாவை நியமித்ததும், அவருக்கு தமிழகம், புதுச்சேரி என, இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாத்திமா ரோஸ்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார் நக்மாவிற்கு ஜம்மு – காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read More »

நீட் தேர்வை மாற்ற முடியாது: தமிழிசை திட்டவட்டம்!

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், மீண்டும் ஒரு மாணவியின் தற்கொலை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அவர் கூறியதாவது, மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்றால் வேறு …

Read More »

கைவிட்ட குமாரசாமி : கர்நாடகாவில் காலா ரிலீஸ் இல்லை?

காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ‘காலா’ படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்குகளுக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்ட நீதிமன்றம், இருப்பினும் காலா படத்தை வெளியிடும் கர்நாடக தியேட்டர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இன்று மாலை உத்தரவிட்டது. கர்நாடகாவில் ‘காலா’ படத்தை திரையிட கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. இதன்படி காவிரி …

Read More »

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை – முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் சட்டசபையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட சபையில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. மக்கும் தன்மையில்லாத பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக உண்ணும் கால்நடைகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதில் பிளாஸ்டிக் முக்கிய பங்கை வகிக்கிறது. கழிவுநீரில் எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால், மழைக்காலங்களில் வடிகால்களில் அடைப்பு …

Read More »

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து வழக்கு: தமிழக அரசு, சிபிஐக்கு நோட்டீஸ்- உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு, சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாநில இந்து ஆலய பாதுகாப்பு அமைப்பின் செயலர் பி.சுடலைமணி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக மீனாட்சியம்மன் கோயில் பலத்த போலீஸ் …

Read More »

சென்னையில் 31 ஷோரூம்களில் தொடர் கொள்ளை; திருடிய பொருட்களை வைத்தே ஷோரூம் திறந்த பலே கொள்ளையன்: 3 பேர் கைது

ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோட்டுர்புரம், சேலையூர், அண்ணாநகர் உட்பட 31 ஷோரூம்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீஸார் கைது செய்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள டைடன் வாட்சுகள், வெள்ளி பொருட்கள், டிவிக்கள், 3 வாகனங்களை கைப்பற்றி உள்ளனர். 2 மாதங்களில் 31 திருட்டுகள் கோடிக்கணக்கில் கொள்ளை சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோட்டூர்புரம், அண்ணாநகர், வடசென்னையில் சில பகுதிகள், சேலையூர் உட்பட 17 காவல் நிலையங்களில் 31 …

Read More »

சென்னையில் பயங்கரம்: நண்பனைக் கொன்று தற்கொலை செய்த இளைஞர்

அண்ணா சாலை ரிச்சித்தெருவில் கோபத்தினால் நண்பனைக் கொன்ற இளைஞர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை அண்ணா சாலை சிம்சன் பின்புறம் ரிச்சி தெரு உள்ளது. இதை அந்த காலத்தில் ரேடியோ மார்க்கெட் என்று அழைப்பார்கள். தற்போது செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் உபகரணங்கள் விற்கும் முக்கிய கேந்திரமாக உள்ளது. இங்கிருந்து ஆந்திரா மற்றும் தமிழக மாவட்டங்களுக்கு செல்போன் உதிரி பாகங்கள், கம்ப்யூட்டர், லாப்டாப், எல்.இ.டி டிவிக்கள் என அனைத்து எலக்ட்ரானிக் …

Read More »

ஓடும் ரயிலில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: டிக்கெட் பரிசோதகர் கைது

ஓடும் ரயிலில் 6 வயது சிறுமியிடம் பாலையல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகரை பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த ஒரு குடும்பம் கோடை விடுமுறையை ஒட்டி கோவை சென்று விட்டு நேற்று சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். ரயிலில் போத்தனூரை சேர்ந்த அனிஷ்குமார்(26) எனபவர் டிக்கெட் பரிசோதகராக வந்தார். அவர் அனைவரையும் டிக்கெட் கேட்டு பரிசோதித்து சீட்டுகளை ஒதுக்கிக்கொண்டிருந்தார். சிறுமி …

Read More »
error: Content is protected !!