Monday , September 24 2018
Home / World News (page 10)

World News

World News

தற்கொலைப்படைத் தாக்குதலுக்குக் குழந்தைகளை பயன்படுத்தும் பாகிஸ்தான்: ஐக்கிய நாடுகள் அதிர்ச்சி

தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மதரஸாக்களில் உள்ள குழந்தைகளை பயன்படுத்துகிறார்கள்,அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவை அதிர்ச்சி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் தீவிரவாத தாக்குதல்கள், ஆயுதம் ஏந்தியப் போராட்டம் ஆகியவற்றால் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் மற்றும் ஆயுதப்போராட்டம் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானில் …

Read More »

ரகசியமாக அணு ஆயுத உற்பத்தியில் வடகொரியா; அதிர்சியில் ​அமெரிக்கா..

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. சியோல்: சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது. வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார். …

Read More »

அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா..

அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக நுழைய முயன்ற சுமார் 13 ஆயிரம் பேரை உணவு, தண்ணீர் இன்றி சஹாரா பாலைவனத்தில் துரத்தி விட்டதாக அல்ஜீரியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோமாலியா, நைஜீரியா, மாலி மற்றும் லிபியா போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரனமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் அண்டை நாடான அல்ஜீரியாவில் தஞ்சமடைய முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்கள் உள்ளே …

Read More »

அரபு நாடுகளை பதற வைத்த இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்!

இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அரபு நாடுகள் பதற்றத்தில் உள்ளன. இஸ்ரேலிய விமான படைகள் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஈரானிய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆனால் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா விமான படைகள் இஸ்ரேல் தாக்குதலை இடைமறித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. …

Read More »

ஆசிரியரின் செக்ஸ் டார்ச்சர் 8 வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

சீனாவில் ஆசிரியர் ஒருவர் கொடுத்த செக்ஸ் டார்ச்சரால் மாணவி ஒருவர் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் குயிங்யாங் நகரை சேர்ந்த லீ என்கிற 19 வயது பள்ளி மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். அவரை பள்ளி ஆசிரியர் ஒருவர் செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார். மாணவியை கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த …

Read More »

விண்வெளியில் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் அனுப்பிய பிரிட்டன்

விண்வெளியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய பிரிட்டன் செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியுள்ளது. விண்வெளியில் பூமியிலிருந்து அனுப்பப்பட்ட செயலிழந்த செயற்கைகோள்கள், உடைந்த செயற்கோள், விமான பாகங்கள், பல ஆராய்ச்சி பாகங்கள் என விண்வெளி முழுக்க நிறைந்து இருக்கிறது. இதனால் இன்னும் சில வருடங்களில் விண்வெளி மிகப்பெரிய குப்பை கூளமாக மாறும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த குப்பைகளை அகற்ற பிரிட்டன் தற்போது களமிறங்கியுள்ளது. இதற்காக ரிமூவ்டேப்ரீஸ் என்ற பெயருடைய செயற்கைக்கொள் ஒன்றை …

Read More »

லண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்!

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள சமூக மையம் ஒன்றில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 15 வயதுடைய சிறுவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்த சிறுவனுக்கு அருகாமையில் இருந்து …

Read More »

வடகொரியா விவகாரத்தில் டிரம்ப் பல்டி.

வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த 12-ந் தேதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பு நடந்த மறுநாளில் டிரம்ப், வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தார். இதுபற்றி அவர் டுவிட்டரில் …

Read More »

எத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு

எத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் தலைநகர் அடிஸ் அபாபாவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் அபி அகமது, ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். உரையை முடித்துக் கொண்டு மக்களை நோக்கி கையசைத்தபடி மேடையில் இருந்து கீழே இறங்கினார். அப்போது பயங்கர சப்தத்துடன் கையெறி குண்டு வெடித்தது. இதனால் பதற்றமடைந்த …

Read More »

சற்று முன் சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்

சிரிய நாட்டுக்குள் எல்லை மீறி நுளைந்துள்ள ஈராக்கிய போர் விமானங்கள் அதிரடியாக ஒரு இடத்தை தாக்கி அழித்துள்ளார்கள். அங்கே மிக முக்கியமான ஐ-எஸ் தீவிரவாதிகள் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டு இருந்துள்ளார்கள். இந்த ரகசிய தகவலை பெற்றுக்கொண்ட ஈராக், சிரியாவிடம் ஒப்புதல் பெறாமல், அத்துமீறி நுளைந்து பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 45 முக்கிய தளபதிகள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று ஊர்ஜிதமாகியுள்ளது. ஆனால் சிரிய அரசு தனது கடும் அதிருப்த்தியை …

Read More »