Monday , December 10 2018
Home / World News (page 14)

World News

World News

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு

பாகிஸ்தான் நாட்டில் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் கடந்த மே மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஜூலை மாதம் 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அந்த நாட்டில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், வேட்பாளர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் …

Read More »

ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை எகிப்தில் இரு வெவ்வேறு வழக்குகளில் அதிரடி

எகிப்து நாட்டில் ஒரு போலீஸ்காரரும், ஒரு பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கை நைல் நதி நகரமான எல் ஜகாஜிக்கில் உள்ள கிரிமினல் கோர்ட்டு விசாரித்தது. கிரிமினல் கோர்ட்டு விசாரணையில் கொல்லப்பட்ட இருவரும் உயிரிழப்பதற்கு முன்பாக துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 18 பேரை தாங்கள் புலனாய்வு செய்து கண்டறிந்ததாகவும் போலீசார் சாட்சியம் கூறினர். விசாரணை முடிவில் அந்த 18 பேர் மீதான குற்றச்சாட்டு …

Read More »

சிரியாவில் வான்தாக்குதல் 54 பேர் உயிரிழப்பு

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் அங்கு அவ்வப்போது வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிரியாவில் யூப்ரடீஸ் நதிக்கு கிழக்கில் அமைந்து உள்ள அல்பு கமால் நகரம், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் பிடியில் உள்ள நகரங்களில் ஒன்று. அந்த நகரத்தின்மீது அமெரிக்க கூட்டுப்படையினர் கடுமையான வான் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 54 பேர் உயிரிழந்து உள்ளதாக …

Read More »

சிறுமிகளுக்கு பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட விவகாரம்: தாயை சிறையில் தள்ளிய நீதிமன்றம்- வெளியான பகீர் தகவல்..!

ஆப்பிரிக்க நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பிறப்புறுப்பு சிதைக்கும் மரபை தமது பிள்ளைகளுக்கும் நடத்திய சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பிறப்புறுப்பு சிதைக்கும் மரபை தமது பிள்ளைகளுக்கும் நடத்திய சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் குடியிருந்து வரும் குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் சோமாலிய நாட்டை சார்ந்தவர். இவர் தங்களது சமுதாய மக்களின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு கடந்த 2013 …

Read More »

‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் பணக்கார பெண்கள் பட்டியல்: 2 இந்திய பெண்கள் இடம் பிடித்தனர்

‘போர்ப்ஸ்’ வெளியிடுகிற பணக்காரர்கள் பட்டியல் உலக பிரசித்தி பெற்றது. இப்போது ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, அமெரிக்காவில் சுயமாக உருவாகி பணக்காரர்களாகி இருக்கிற 60 பெண்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள், ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி ஆவார்கள். 57 வயதான ஜெயஸ்ரீ உல்லால், லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர். அரிஸ்டா நெட்வொர்க்ஸ் என்ற கம்ப்யூட்டர் நெட்வொர்க் …

Read More »

அமெரிக்காவில் ஆபாச நடிகை கைது டிரம்ப் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக கூறியவர்

ஜனாதிபதி தேர்தலின்போது இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக தனக்கு டிரம்ப் வக்கீல் மைக்கேல் கோஹன் 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.88 லட்சம்) தந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் ஓஹியோ மாகாணம், கொலம்பஸ் நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அங்கு அவர் வயது வந்தவர்களுக்கு கவர்ச்சியான நடனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தி உற்சாகம் ஏற்படுத்துகிற ‘ஸ்ட்ரிப் கிளப்’ நிகழ்ச்சி …

Read More »

நிதி அதிகாரம் பெற்றிருக்கும் பெண்கள், சமுதாய தீமைகளுக்கு எதிரான அரணாக திகழ்வார்கள் பிரதமர் பேச்சு

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். ‘நரேந்திர மோடி செயலி’ வழியாக நடந்த இந்த நிகழ்ச்சியில், 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு, சுயஉதவிக்குழு மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகள் மற்றும் வளங்களை பிரதமரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கிராமப்புற மேம்பாட்டுக்காக உழைத்து வரும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை பிரதமர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:– 2014–ம் ஆண்டில் இருந்து முன்னுரிமை …

Read More »

அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு

சிகிச்சையின் போது ஜெயலலிதா இனிப்பு மற்றும் பழங்கள் சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். மருத்துவர் ஷில்பா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- …

Read More »

சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

சீனாவில் இராசயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மள மள வென ஆலையில் பரவிய தீயால் எங்கும் புகைமூட்டம் காணப்பட்டது. இதனிடையே ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் …

Read More »

வானத்தில் கடவுளின் கண்?…. மக்கள் வியப்பு!!!

சீனாவில் வானத்தில் கண் போன்ற உருவம் தோன்றிய நிலையில் அது கடவுளின் கண் என்ற செய்தி தீயாக பரவியது. சீனாவின் வடக்கு இன்னர் மங்கோலியாவில் வானத்தில் மேகத்தின் நடுவில் நிலா இருந்த காட்சி பார்ப்பதற்கு கண் போல இருந்துள்ளது. இந்த காட்சியை பெண்ணொருவர் வீடியோவாக எடுத்த நிலையில், அது கடவுளின் கண் என கூறினார். இதையடுத்து இந்த செய்தி தீயாக மற்ற இடங்களுக்கு பரவியது. ஆனால் வானத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வு …

Read More »