Wednesday , August 15 2018
Breaking News
Home / World News (page 3)

World News

ரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது

ரஷியா நாட்டை சேர்ந்தவர் மரியா புட்டினா(29). அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மரியா, ரஷியா நாட்டின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். இந்நிலையில், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரில் அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மெல்லமெல்ல பிரபலமடைந்த மரியா, தன்னை ரஷிய அரசின் உளவாளியாக சிலரிடம் அறிமுகம் செய்துகொண்டார். பல்வேறு பிரபலங்களுடன் இருக்கும் …

Read More »

சிரியா முகாம்களில் ரஷ்யா தாக்குதல்: 10 பேர் பலி

சிரியா முகாம்களின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து போரில் பாதிக்கப்படும் சிரிய மக்களுக்குக்கான உதவும் அமைப்பு ஒன்று கூறும்போது, “சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் தாக்குதல் காரணமாக தங்கள் இருப்பிடத்திலிருந்து சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஐன் எல்- தினா கிராமத்திலுள்ள ஒரு பள்ளியிலுள்ள முகாம்களில் மக்கள் தங்கியுள்ளனர். அங்கு …

Read More »

பிரிட்டன் வரும் இந்திய மாணவர்களுக்கு விசா விதிகளை தளர்த்த லண்டன் மேயர் கோரிக்கை

பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவர்கள் ஆங்கில புலமை பெற்றிருக்க வேண்டும். பிரிட்டனில் வாழ்வதற்கான பொருளாதார வசதி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றுக்கு தகுந்த சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். எனினும் பிரிட்டனின் நட்பு நாடுகள் பட்டியலில் உள்ள பல நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கண்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், அந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எளிதாக …

Read More »

ஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து – கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்

ஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து – கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்! ஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும், புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக், ஐக்கிய அமீரக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும், உயிருக்கு ஆபத்து …

Read More »

தாய்லாந்து மீட்புப் பணியில் உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி!

வெள்ளம் சூழ்ந்த தாய்லாந்து குகையில் 17 நாள்கள் சிக்கியிருந்து சர்வதேச உதவியுடன் நடந்த மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை மூலம் காப்பாற்றப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும், மீட்புப் பணியில் உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தினர். வெள்ளம் சூழ்ந்த குகையில் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் சிக்கிக் கொண்ட இவர்களுக்கு, மீட்பு நடவடிக்கைக்கு முன்னதாக, ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட தாய்லாந்து கடற்படையைச் சேர்ந்த முக்குளிக்கும் வீரர் …

Read More »

ஆப்கானிஸ்தானில் மந்திரி அலுவலக வாசலில் தற்கொலை படை தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் மந்திரி அலுவலக வாசலில் தற்கொலை படை தாக்குதல் ஆப்கானிஸ்தானில் மந்திரி அலுவலக வாசலில் தற்கொலை படை தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஆப்கானிஸ்தானில் ஊரக மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு மந்திரியின் அலுவலகத்தை வெளிநாட்டு ஆலோசகர்கள் பார்வையிட நேற்று வந்திருந்தனர். இந்நிலையில் திடீரென மந்திரி அலுவலக வாசலில் தற்கொலைப் படையினர் குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அரசு …

Read More »

அடியலா சிறையில் நவாஸ் ஷெரீப்புடன் குடும்பத்தினர் சந்திப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் லண்டனில் ‘அவென்பீல்டு’ சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரும், அவரது மகள் மரியமும், மருமகன் கேப்டன் சப்தாரும் தண்டிக்கப்பட்டனர். ராவல்பிண்டி அடியலா சிறையில் கேப்டன் சப்தார் ஏற்கனவே அடைக்கப்பட்ட நிலையில், நவாஸ் ஷெரீப்பும், அவரது மகள் மரியமும் 13–ந் தேதி இரவு லண்டனில் இருந்து திரும்பிய நிலையில், அந்த சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறையில் …

Read More »

ஹைதி நாட்டின் பிரதமர் ராஜினாமா பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் போராட்டம்

கரீபியன் கடல் தீவு நாடுகளில் ஒன்று, ஹைதி. இந்த நாட்டின் வளர்ச்சிக்காக சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கு கடந்த பிப்ரவரி மாதம், சர்வதேச நிதியத்துடன் (ஐ.எம்.எப்.) ஒரு ஒப்பந்தம் போட்டனர். எரிபொருளுக்கான மானியத்தை விலக்கிக் கொண்டால்தான், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு உருவாக்கல் போன்றவற்றுக்கு நிதி கிடைக்கும் என சர்வதேச நிதியம் கூறியது. இதையடுத்து எரிபொருட்களுக்கான மானியம் விலக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் விலை 38 சதவீதமும், டீசல் விலை 47 சதவீதமும், …

Read More »

2014 போருக்கு பின்னர் முதல் முறையாக ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து கடும் தாக்குதல்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனில் ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன மக்களிடையே ஆதரவு பெற்று உள்ளது. இஸ்ரேலை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதே ஹமாஸ் இயக்கத்தினர் குறிக்கோள். ஆனால் இஸ்ரேலுக்கு ஹமாஸ் இயக்கத்தினரையும் பிடிக்காது, அவர்களின் நோக்கமும் …

Read More »

பால்கனியின் கம்பிகளுக்கிடையே கழுத்து சிக்கி தொங்கிய குழந்தைகள்

சீனாவில் வீட்டின் பால்கனியில் உள்ள கம்பிகளுக்கிடையே சிக்கி கதறி அழுத குழந்தைகளை அங்கிருந்த சிலர் காப்பாற்றியுள்ளனர். சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் முதல் மாடியில் கடந்த செவ்வாய்கிழமை இரண்டு குழந்தைகள் அங்கிருக்கும் பால்கனியின் கம்பிகளுக்கிடையில் சிக்கியுள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளின் கழுத்துப் பகுதி கம்பியில் சிக்கிய நிலையிலும், பாதி உடல் வெளியிலும் என சுமார் 10 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு கதறி அழுதுள்ளனர். இதைக் …

Read More »