Tuesday , December 11 2018
Home / World News (page 5)

World News

World News

கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்: 189 பலி?

இந்தோனேசிய விமானம் விமான் ஜேடி 610 பறக்க ஆரம்பித்த 13 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, கடலில் விழுந்தது. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பினாங்கு நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான் ஜேடி 610 என்ற விமானம் திங்கட்கிழமை காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 189 பேர் பயணித்த நிலையில், வானில் …

Read More »

கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்: பாகங்கள் மீட்பு!

இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்து தெரிய வந்துள்ளது. இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம். வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட …

Read More »

அமெரிக்கா அழுத்தம் : பாராளுமன்றத்தை உடன் கூட்டவும் !

அமெரிக்கா

பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர், ஹீதர் நுவேட்வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் தற்போதைய நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகிறது. பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு அழைப்பு விடுக்கிறோம். எவர் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதை உறுதி …

Read More »

தமிழக மீனவர்கள் பிரச்சனை !பேசித் தீர்வு காணலாம்

தமிழ மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விரைவில் பேசி சுமூகமாக தீர்வு காணலாம் என இலங்கை முன்னாள் எம்.எல்.ஏ. சதாசிவம் பேட்டியளித்துள்ளார். நாகை ஆயக்காரன் ஆஞ்சனேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சதாசிவம் கூறியதாவது: கடந்த 2009 ஆம் ஆண்டில் ராஜபக்சே இலங்கையின் பிரதமராக இருந்த போது உள்நாட்டு யுத்தம் வந்ததால் அவர் தமிழர்களுக்கு எதிரானவர் என கூறமுடியாது. தற்போது தமிழக மீனவர்கள் இந்திய எல்லை …

Read More »

பிரித்தானிய வாழ் தமிழர்களை இலங்கை செல்ல தடை!

சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற அரசு அறிக்கையின் படி, இலங்கை நிலை தொடர்பாக பிரித்தானிய அரசு தனது கவலையை வெளியிட்டுள்ளது. ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி MP போல் ஸ்காலி அவர்கள், பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார். இலங்கையில் ஸ்திரமான நிலை இல்லை. தற்போது மேலதிக சிக்கல் தோன்றியுள்ளது. இன் நிலையில் அன் நாட்டில் என்ன வேண்டும் என்றாலும் நிகழலாம். எனவே இலங்கை செல்லும் பிரித்தானியர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத …

Read More »

தாய் செய்த கொடூர செயல்

அமெரிக்காவில் குழந்தை ஓயாமல் அழுதுகொண்டே இருந்ததால் பெற்ற தாயே குழந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் ஜென்னா வீட்டில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது குழந்தை இடைவிடாமல் தொடர்ச்சியாக அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜென்னா பெற்ற பிள்ளை என்றும் பாராமல் குழந்தையை குளியல் தொட்டியில் …

Read More »

கோலா கொடுத்த தந்தை: உள்ளே தூக்கி போட்ட போலீஸ்

கோலா

பிரான்ஸில் தந்தை ஒருவர் தனது குழந்தைகளுக்கு எந்நேரமும் கொக்கக் கோலா கொடுத்துக் கொண்டே இருந்த குற்றத்திற்காக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். குடிகாரரான தந்தை குடும்பத்தை கவனிக்காமல் எந்நேரமும் குடித்துவிட்டு தன் குடும்பத்தாரை கொடுமை படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். கொடூரத்தின் உச்சமாய் தன் பிள்ளைகளுக்கு உணவளிக்காமல் அவர்களுக்கு எப்பொழுதும் கொக்க கோலா கொடுத்து வந்துள்ளார். …

Read More »

48 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய கூகுள்

48 ஊழியர்களை

கடந்த சில நாட்களாக மீடு விவகாரம் தமிழ் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திரையுலகம் மட்டுமின்றி தற்போது அனைத்து துறைகளிலும் மீடூ குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மீடூ குற்றச்சாட்டால் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த 48 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் சீனியர் ஊழியர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை கூறியபோது, ‘ ‘கடந்த 2 ஆண்டுகளில், பாலியல் தொல்லை …

Read More »

தந்தைக்கு தோழியை திருமணம் செய்து வைத்த மகள்

தந்தைக்கு

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது தந்தைக்கு தோழியை திருமணம் செய்து வைத்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் அமண்டா என்ற இளம்பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருப்தியான வேலை அழகான குடும்பம் என இவரது வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்தது. இவரது தோழி டெய்லர் மூலம் இவரின் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அமண்டா தனது தோழியான டெய்லரை அவ்வப்போது தனது …

Read More »

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி

கிரீஸ்

கிரீஸ் நாட்டி 6.8 அளவு ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 6.8 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் …

Read More »