Breaking News
நோன்பு பெருநாள் கொண்டாட்டம்

நோன்பு பெருநாள் கொண்டாட்டம்

நோன்பு பெருநாள் கொண்டாட்டம்

நாட்டின் பல பாகங்களில் நேற்றைய தினம் தலை பிறை தென்பட்டதனால், இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைகுழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறை குழு கூடியது.

பிறை குழுத் தலைவர் மௌலவி அப்துல் அமீத் பஹ்ஜி இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இஸ்லாமிய சமய நாட்காட்டியில் ஒரு முக்கிய பண்டிகையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை சமூகத்தில் இஸ்லாமிய சகோதரத்துவம், வரலாறு முழுவதும் உலகிற்கு முன்னுதாரணமானதாகும்.

ஒரு சில தீவிரவாதிகளின் நடத்தைகளினால் அந்த சகோதரத்துவம் பாதிப்படைய நாம் இடமளிக்கக் கூடாது.

தீவிரவாதம் இஸ்லாத்தின் அடிப்படைப் பெறுமானங்களுக்கு எதிரானது என்பது உண்மையான இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும்.

எனவே, நம்பிக்கையீனம், சந்தேகங்களை கலைந்து புனித அல்குர்ஆனின் போதனைகளை ஆழ்ந்து பின்பற்றுவதற்கு இந்த ரமழான் சிறந்த சந்தர்ப்பமாகும் என தான் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், சுய கட்டுப்பாட்டுடன். பொறுமைக்கு முக்கியத்துவமளித்து, ஏனையவர்களின் நலனுக்காக முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் முஸ்லிம்கள், மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக பல்வேறு சவால்களுக்கு முக்ங்கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தங்களது குடும்பங்களை பாதுகாத்து இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தாங்கள் பலவிதமான சோதனைகளை அனுபவித்துவருகின்ற நிலையில், சகல இன மக்களிடத்திலும் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படுவதற்கு இந்நன்னாளில் பிரார்த்திப்போமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தனது நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு புனித ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும், பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டும் உள்ளன.

இந்த நிலையில், சமூக இடைவெளியை கண்டிப்பாக பேணவேண்டிய அவசியமும், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், புனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மத நம்பிக்கைகளை அடியொற்றி பின்பற்றும் அதேவேளை, நாட்டின் சட்ட திட்டங்களையும் மதித்தே, பெருநாளைக் கொண்டாட வேண்டியுள்ளதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாக அவரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …