தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் -வைகோ கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; -“தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக்கொண்டு இருப்பது தவறான நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா லட்சியங்களுக்கு எதிராக திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலினே சரியான எதிர்ப்பைக் காட்டி வருகிறார். மக்கள் செல்வாக்கு அவருக்கு நாளும் அதிகரித்து வருகிறது.

பெரியார் சிலையை உடைப்பது போன்ற கேடான செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது.

அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை விலக்கிக்கொண்டதற்காக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கண்டனங்கள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவை எதிர்கொள்ள நட்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டுகின்றது இலங்கை!

யாழில் சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் வாள்!

Tags
Show More

Related Articles

Back to top button
Close