Breaking News

சம்பிக்கவுக்கு மறியல் நீடிப்பு! – வெலிக்கடைச் சிறையில் அடைப்பு

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு இராஜகிரியப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உண்மைகளை, சாட்சிகளை மறைத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் சம்பிக்க ரணவக்க நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவித்தலுக்கமைய நேற்றிரவு சம்பிக்கவின் வீட்டுக்குச் சென்ற கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா தலைமையிலான குழுவினர் அவரைக் கைதுசெய்திருந்தனர்.

அதன்பின்னர் தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சம்பிக்க அங்கு சில மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் நேற்றிரவு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இன்று வரை விளக்கமறியல் உத்தரவை நீதிவான் வழங்கினார்.

இந்தநிலையில், சம்பிக்க இன்று மீண்டும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின்னர் அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …