Breaking News

சம்பிக்கவின் கைது பழிவாங்கல் அல்ல!

“முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கைது எந்த விதத்திலும் அரசியல் பழிவாங்கல் அல்ல. சட்டத்தை ஏமாற்றிய நபருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையே இதுவாகும்.”

– இவ்வாறு ராஜபக்ச அரசு கூறியுள்ளது.

கடந்த ஆட்சியில் அடக்குமுறைகளைக் கையாண்ட நபர்களுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்தால் அனைவருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

About விடுதலை

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …