Saturday , August 24 2019
Breaking News
Home / இந்தியா செய்திகள் / நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது சந்திரயான்-2 விண்கலம்
சந்திரயான்-2

நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது சந்திரயான்-2 விண்கலம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

சந்திரயான்-2 விண்கலம் இன்று அதிகாலை புவிசுற்றுவட்டப் பாதையைக் கடந்து, நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்த சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 5 கட்டங்களாக புவி வட்டப் பாதையை கடந்து சென்ற இந்த விண்கலம் இன்று அதிகாலை 2.21 மணியளவில் நிலவை நோக்கி புறப்பட்டது.

வரும் 20 ஆம் தேதியன்று சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை அடைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நிலவை சுற்றத் தொடங்கியதும் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து தரை இறங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 24 ஆவணி 2019 சனிக்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesஇன்றைய பஞ்சாங்கம் 24-08-2019, ஆவணி 07, சனிக்கிழமை, அஷ்டமி திதி காலை 08.32 வரை பின்பு தேய்பிறை …