Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / சென்னையில் குறைந்த காற்று மாசு! சென்னைவாசிகள் நிம்மதி
சென்னை

சென்னையில் குறைந்த காற்று மாசு! சென்னைவாசிகள் நிம்மதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

சென்னையில் கடந்த ஒருவாரமாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு அளவு இன்று வெகுவாகக் குறைந்தது.

டெல்லியைப் போன்று சென்னையிலும் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது.

காற்றில் ஈரப்பதம் இருப்பதால் வாகனங்கள், தொழிற்சாலை புகை, கட்டட மாசு ஆகியவை கலந்து காற்றின் மாசு அளவு அதிகரித்ததாகவும், இது இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி காற்று மாசு வெகுவாகக் குறைந்துள்ளது.

நேற்று காற்றின் தரக்குறியீடு 288 ஆக இருந்த வேளச்சேரி பகுதியில் இன்று 78 ஆக குறைந்துள்ளது.

இதேபோன்று மணலி புறநகர் பகுதியில் 85, ஆலந்தூரில் 90 ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.

தரக்குறியீடு 50 க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க கூடியதாக இருக்கும் நிலையில், தற்போது காற்றின் தரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியிருப்பது சென்னை வாசிகளை நிம்மதியடையச் செய்துள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

நான் அதிகராத்திற்கு வந்தால் ராஜபக்ஷே கதை கந்தல்..!! அடித்து கூறும் பிரிட்டீஸ் எதிர்கட்சித் தலைவர்..!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Shares தான் அதிகாரத்துக்கு வந்தால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சுயாட்சி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என …