Home / முக்கிய செய்திகள் / கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை

கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்.

பெரிய நிறுவனங்களுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி மஞ்சுளா மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ரித்தேஷ் சாய் என்ற மகன் உள்ளார்.

அதேபகுதியில் பெற்றோருடன் நாகராஜ் என்பவர் வசித்துள்ளார். இவருக்கும் ரித்தேஷின் தாய் மஞ்சுளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கார்த்திகேயன் வீட்டில் இல்லாத நேரத்தில் நாகராஜ் அவரது வீட்டுக்கு சென்று மஞ்சுளாவுடன் உல்லாசமாக இருந்துவந்தார்.

இதனை ஒரு நாள் ரித்தேஷ் பார்த்துவிட்டு தந்தையிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், ரித்தேசை கடத்தி தாம்பரம் பகுதியில் தான் வேலை பார்த்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தார்.

இந்த தகவல் தெரிந்து கார்த்திகேயன் போலீசில் புகார் செய்ததால் ஆத்திரத்தில் நாகராஜ் ரித்தேஷை கொலை செய்து அந்த அறையிலேயே உடலை மறைத்து வைத்தார்.

பின்னர் போலீசார் நாகராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதன் பின் தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்ற நாகராஜ் அங்குள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

நாகராஜ் வேலைபார்க்கும் கடைக்கு நேற்று மாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் நாகராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு இருந்து தப்பிச்சென்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிழந்தார்.

தகவல் அறிந்த திருவண்ணாமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாகராஜ் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கள்ளக்காதல் பிரச்னையில் சிறுவனை கடத்தி படுகொலை செய்த வழக்கில் கைதானவர் என்பது தெரியவந்தது.

நாகராஜை கொலை செய்தது யார்? சென்னை கொலை வழக்கில் தொடர்புள்ளவர்களா? அல்லது கூலிப்படையினரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!11Sharesஇன்றைய பஞ்சாங்கம் 16-07-2019, ஆனி 31, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 03.08 வரை பின்பு தேய்பிறை …