Breaking News
ஜோபைடனுக்கு பெருகும் ஆதரவு

ஜோபைடனுக்கு பெருகும் ஆதரவு

ஜோபைடனுக்கு பெருகும் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் – ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார்.

நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை ஈர்ப்பதற்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. அடுத்தடுத்து வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜோ பைடனுக்கு அதிக ஆதரவு இருப்பதாக தெரிவிக்கின்றன.

சிஎன்என் செய்தி நிறுவனம் அண்மையில் உலகின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த CFO என அழைக்கப்படும் தலைமை நிதித்துறை அதிகாரிகளிடம் அதிபர் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் எதிர்பாராத விதமாக 75 விழுக்காட்டினர் ஜோ பைடன் அடுத்த அதிபர் ஆவார் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு பைடனுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், குடியரசுக்கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் அணியினர் 6 முக்கிய காரணிகளை முன்னிறுத்தி பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா கால நடவடிக்கைகள், பொருளாதார மேம்பாடு, கறுப்பினத்தவருக்கு எதிரானவர் டிரம்ப் என்ற பிம்பத்தை உடைப்பது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி டிரம்ப் அணியினர் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர்.

பைடனை கடுமையாக விமர்சிப்பது, வாக்களிப்பது குறித்து தற்போது வரை முடிவெடுக்காதவர்களை நோக்கி செல்வது ஆகிய வியூகங்களையும் டிரம்ப் அணியினர் வகுத்துள்ளனர்.

காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாடசாலைகள்

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …