Breaking News
ராணுவத்தை நவீனப்படுத்த சீனா திட்டம்

ராணுவத்தை நவீனப்படுத்த சீனா திட்டம்

ராணுவத்தை நவீனப்படுத்த சீனா திட்டம்

அமெரிக்க ராணுவத்துக்கு நிகராக சீனாவின் ராணுவத்தையும் நவீனப்படுத்துவதற்கு அந்த நாடு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக சீன ராணுவம் தோற்றுவிக்கப்பட்ட நூற்றாண்டான 2027-ம் ஆண்டுக்குள் அதை நவீனப்படுத்தி மேம்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.

அந்த நாட்டின் ஆளும் கட்சியான சீன கம்யூனிஸ்டு கட்சியின் 4 நாள் மாநாடு சமீபத்தில் நடந்தது. அதிபர் ஜின்பிங் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் அவர் கொண்டு வந்த, 2021-25-ம் ஆண்டுக்கான ஐந்தாண்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் தேசிய பொருளாதார, சமூக வளர்ச்சி திட்டங்களுடன், 2035-ம் ஆண்டு வரையிலான நீண்ட கால திட்டங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் குறிப்பாக, சீன ராணுவத்தை மேம்படுத்தும் ஜின்பிங்கின் திட்டமும் இறுதி செய்யப்பட்டது.

அதன்படி 2027-ம் ஆண்டுக்குள் முழுமையான நவீன ராணுவம் ஒன்றை சீனா அமைக்கும். குறிப்பாக அமெரிக்காவுக்கு இணையாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் மேம்படுத்தப்படும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் எதிர்கால தேசிய பாதுகாப்பு தேவைகளை கருத்தில் கொண்டும், நாட்டின் தேசிய இறையாண்மை, மேற்கு பசிபிக் பிராந்தியங்களில் எழும் மேலாதிக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டும், நாட்டின் சர்வதேச பொருளாதார இருப்பு வளரும்போது, அதன் வளர்ச்சி நலன்களை பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

சீன ராணுவத்தின் இந்த நூற்றாண்டு இலக்கு அமல்படுத்தப்படும் போது, உலக அளவில் நவீனத்துவம் பெற்றதாகவும், அமெரிக்காவின் வலிமைக்கு நிகராகவும் சீன ராணுவம் இருக்கும் என சீன பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர் தனிமைப்படுத்தி கொண்டார்

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …