Breaking News

சீனாவில் 2-ம் கட்ட பரவலை எட்டிய கொரோனா

சீனாவில் 2-ம் கட்ட பரவலை எட்டிய கொரோனா

சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் ஜூன் மாதம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்குள்ள ஓர் இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக பெய்ஜிங்கில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டப் பரவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் மெல்லத் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து சீனாவின் சுகாதார அமைப்பு கூறியதாவது:-

சீனாவில் கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இதில் 89 பேருக்கு உள்ளூரிலேயே தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் சின்ஜியாங் மாகாணத்தைச் சேந்தவர்கள். உரும்கி நகரில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 15 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா பரவல் 2-வது கட்டத்தை அடைந்துள்ளது அங்குள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தலியன், உரும்கி நகரங்களில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Today rasi palan – 30.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜூலை 30, 2020)

About அருள்

Check Also

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி உலகம் முழுவதும் 3,32,97,503 பேருக்கு கொரோனா வைரஸ் …