Breaking News
அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும் சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதுபற்றி சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் தேவையற்ற காரணங்களுக்காக சீனாவின் இரு நிறுவனங்களையும் அடக்குவதற்கு அமெரிக்கா பலமுறை அரசு அதிகாரத்தை பயன்படுத்தியது.

இது அந்த நிறுவனங்களின் இயல்பான வணிக நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது. அமெரிக்க முதலீட்டு சூழலில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தகத்தை சேதப்படுத்தியது.

அமெரிக்கா உடனடியாக கொடுமைபடுத்துதலை நிறுத்தி சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்கை முறையாக பின்பற்ற வேண்டும்.

அமெரிக்கா தனது சொந்த வழியை கொண்டிருப்பதில் உறுதியாக இருந்தால் சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியுடன் பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)   இன்றைய …