Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / எது சரியோ அதைதான் நீ செஞ்சிருக்க… கவினை பாராட்டிய பிக்பாஸ் 3 போட்டியாளர்!
பிக்பாஸ் 3

எது சரியோ அதைதான் நீ செஞ்சிருக்க… கவினை பாராட்டிய பிக்பாஸ் 3 போட்டியாளர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட்டு சமீபத்தில் வெளியேறிய கவினை பாராட்டி நடிகை ரேஷ்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது வார இறுதியில் இருந்து ஒரு ஒரு போட்டியாளராக எவிக்‌ஷன் மூலமாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்ட பிறகு இந்த வாரம் 6 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார்.

அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு முதலாவதாக எழுந்த கவின் நான் இந்த தொகையை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நடிகை ரேஷ்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கவின் நீ இந்த நேரத்தில் இதை செய்தது தான் சரி என்றும், உனக்கு என்னுடைய ஆதரவு எப்பவும் இருக்கும் என்றும் ரேஷ்மா அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக விளம்பரம் பதாகைகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …