வனிதா

பிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்!

இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

இதில் தர்ஷன், சாண்டி, கவின், ஷெரின், வனிதா ஆகிய 5 பேர் இந்தவாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர்களில் இடம்பெற்றனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இன்று வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் முதல் புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வெளியேற்றப்படுவோரின் பெயர் அடங்கிய அட்டையுடன் தோன்றியுள்ளார் கமல்ஹாசன்.

மேலும் அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் உரையாடும் கமல்ஹாசன், இப்போது எவிக்‌ஷனை நோக்கி இங்கே இருக்கும் ஐவரில் யார் வெளியேற்றப்படுவார் என்பதில் உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்கிறார்.

இதையடுத்து அனைவரும் மவுனம் காக்கின்றனர். முதல் புரமோ வீடியோ இவ்வாறாக இருக்க நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் வனிதா விஜய்குமார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

முதல்முறை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் மீண்டும் உள்ளே நுழைந்ததும் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியது. ஆனாலும் குரல் உயர்த்திப் பேசுவது, மற்றவர்களின் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானார்.

ஆனால் ஒருகட்டத்தில் சேரன் வெளியேற்றப்படுகிறார் என்று நினைத்து கண்ணீர் விட்ட வனிதா, தனது குழந்தைகளுடன் அன்பை பரிமாறிக் கொண்டவிதம், கடந்த ஒருவாரமாக வீட்டில் அவரது நடவடிக்கைகள் ஆகியவை பார்வையாளர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் அதைச் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்ததற்கு தர்ஷன் -ஷெரின் விவகாரத்தை வனிதா கையாண்ட விதமாகக் கூட இருக்கலாம்.

Check Also

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர் கொரோனா தொற்றுக் காரணாக இந்தியாவில் சிக்கித் தவித்த 320 இலங்கையர்கள் இன்றையதினம் சிறப்பு …