Breaking News
Home / சினிமா செய்திகள் / பிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது!
பிகில்

பிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

பிகில் திரைப்படம் வெளியாவதில் நீடித்த குழப்பம் தீர்ந்தது.

விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வெறித்தனம், சிங்கப்பெண்ணே ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 19-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே அதாவது அக்டோபர் 25-ம் தேதி அன்று படம் வெளியாக இருப்பதாக ஒரு கருத்து நிலவியது.

தீபாவளி அக்டோபர் 27-ம் தேதி அதாவது ஞாயிறன்று வருவதால் வெள்ளி, சனி ஆகிய இரண்டு விடுமுறை தினங்களின் வசூலை குறி வைத்து அக்டோபர் 25-ம் தேதியே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் விஜய் படம் தீபாவளிக்கு வெளியாவதையே அவரது ரசிகர்கள் விரும்புவதால் ஞாயிறு அன்றே அதாவது தீபாவளி தினத்தன்றே பிகில் வெளியாகும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

ப.சிதம்பரம்

சிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares ப.சிதம்பரம், 43 நாள்கள் சிறை வாசத்தில் 5 கிலோ எடை குறைந்துள்ளார் என்று அவருடைய வழக்கறிஞர் …