Friday , September 21 2018
Home / Cinema News / ஓரினச் சேர்க்கையில் தவறு இல்லை, அது உணர்வு சம்பந்தப்பட்டது
ஓரினச் சேர்க்கையில்

ஓரினச் சேர்க்கையில் தவறு இல்லை, அது உணர்வு சம்பந்தப்பட்டது

தன் பாலின சேர்க்கை என்பது தவறில்லை, அது உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்று என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என சட்டப்பிரிவு 377-ல் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் பாலியல் உறவு யாருடன் கொள்வது என்பது அவரவர் உரிமை எனவே சட்டப்பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் எனத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டு வந்தது.

இவ்வழக்கு குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையை தடுக்கும் சட்டப்பிரிவு 377 சட்டவிரோதமானது. ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருத முடியாது என்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் நடைபெற்ற திருநங்கைகளின் புகைப்பட கண்காட்சியை விஜய் சேதுபதி நேற்று தொடங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் பாலின சேர்க்கை என்பது தவறில்லை, அது உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்று என்று தெரிவித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்கிறேன், பேரறிவாளன் அற்புதம்மாவுக்கு இன்னும் குழந்தை தான். தமிழக அரசு அவரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Check Also

எல்லார்கிட்டையும்

எல்லார்கிட்டையும் போய்டுவீங்களா…? அவ்ளோ சீப்பா நீங்க..?

கடந்த சில நாட்களாக சீரியல் நடிகை நிலானி என்பவரால் உதவி இயக்குனராக இருந்த காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை …