Friday , November 16 2018
Home / Cinema News / சர்கார் விவகாரம்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை

சர்கார் விவகாரம்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வெளியான பிறகு கோமளவள்ளி என்பதைக் கூகுளில் பலரும் தேடியுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார் பல சர்ச்சைகளைத் தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனிடையே சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

அவருக்குத் திரைப்படத்தில் கோமளவள்ளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் எனச் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் அரசின் திட்டங்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதிமுக அமைச்சர்கள் பலரும் சர்கார் படம் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் சர்கார் திரைப்படம் வெளியான நாளில் இருந்து கோமளவள்ளி என்பதைக் கூகுளில் பலரும் தேடியுள்ளனர். கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயரா?

ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ன? கோமளவள்ளியின் அர்த்தம் என்ன? சர்காருக்கும் கோமளவள்ளிக்கும் என்ன தொடர்பு உள்ளிட்ட பல கேள்விகளை உள்ளடக்கி இந்த தேடுதல் நடந்துள்ளது.

Check Also

கரையை கடக்கிறது கஜா புயல்…: Live

வங்கக்கடலில் கடந்த 10ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கரையை …