Friday , September 21 2018
Home / Cinema News / அரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிடும் விஜய்
அரசியலுக்கு

அரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிடும் விஜய்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிட்டுள்ளதாக ராதாரவி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கருணாநிதி மறைவிற்குப் பின் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த வைத்தியத்தை பயன்படுத்தி அரசியலில் களம் காண ரஜினிகாந்த், கமல்ஹாசன் ,விஷால், உள்ளிட்டோர் தீவிரமாக உள்ளனர்.

இதை பயன்படுத்தி தமிழகத்தில் கால் பதிக்கவும் பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார் .

இந்த படத்தில் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது அரசியல் படமாக கருதப்படுகிறது.

இந்த படம் குறித்து ராதாரவி பேசுகையில், விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் பேசினார்.

“விஜய் அரசியலுக்குள் நுழைய ரகசியமாக திட்டமிடுவது நன்றாக தெரிகிறது.

அரசியல் வாழ்க்கையில் அனைத்தையும் எப்படி கையாள்வது, ஒரு தலைவனாக மக்களை எப்படி வழிநடத்துவது போன்றவற்றை சர்கார் நாயகன் மெதுவாக கற்று வருகிறார்” என்று கூறியுள்ளார்.

ராதாரவியின் இக்கருத்து விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Check Also

யாஷிகாவின்

யாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்!

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யாஷிகாவின் உடல் வலிமை குறித்து விஜயலக்ஷ்மியின் கணவர் ஃபெரோஸ் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் …