Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / எனக்கு மீண்டும் திருமணமா? – பிக்பாஸ் ரேஷ்மா விளக்கம்!
ரேஷ்மா

எனக்கு மீண்டும் திருமணமா? – பிக்பாஸ் ரேஷ்மா விளக்கம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 23
    Shares

திருமணம் குறித்து வெளியான தகவல் தொடர்பாக நடிகை ரேஷ்மா விளக்கமளித்துள்ளார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது சமூகவலைத்தள பக்க பதிவில் தனது நண்பர் நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதையடுத்து ரேஷ்மா மூன்றாவது முறையாகத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியானது.

Any news regarding my personal life is untrue, and a mere speculation. Kindly do not spread false information regarding me. Thank you.🙏🏽

— Reshma Pasupuleti (@reshupasupuleti) December 1, 2019

அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகை ரேஷ்மா, எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வரும் செய்திகளில் உண்மையில்லை.

அவை வெறும் ஊகங்களே. என்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என்றி கூறியுள்ளார்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 23
    Shares

Check Also

வவுனியா

வவுனியா விபத்தில் 4 இராணுவத்தினர் உட்பட ஜவர் படுகாயம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!23Shares வவுனியா – ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு …