Sunday , July 15 2018
Breaking News
Home / Uncategorized / தேங்காய்ப்பால் கோழிக்கறி குழம்பு

தேங்காய்ப்பால் கோழிக்கறி குழம்பு

தேங்காய்ப்பால் கோழிக்கறியை செய்வது சுலபம், சுவையும் அருமையாக இருக்கும். சரி இப்போது இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோழிக்கறி – 1/2 கிலோ

கருவேப்பிலை

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

கடலை மாவு – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – அழகுப்படுத்த

தண்ணீர் -சிறிதளவு

நறுக்கிய வெங்காயம் – 1

தேங்காயப்பால் – 1/2 கப்

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

பேசன் ( கடலை மாவு) – 1/4 கப்

சிக்கன் மசாலா

உப்பு – சுவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கடலை மாவை இட்டு லேசாக பொன்னிறமாக வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வறத்த கடலை மா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக கலந்துகொள்ளவும்.

மற்றொரு கிண்ணத்தில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிக்கன் மசாலா, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் கருவேப்பிலை இட்டு கலந்து வைத்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன், கோழி இறைச்சியை சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கவும்.

பிறகு, பாத்திரத்தின் மூடியை எடுத்துவிட்டு தேங்காய்ப்பாலைச் சேர்த்து கிளறி விடவும். அதன் மேலாக கடலை மா, தண்ணீர் சேர்த்து கலந்து வைத்த மாவில் தண்ணீரை மேலாக ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கறி வெந்தும் நல்ல மசாலா வாசனையுடன் அடுப்பை அணைக்கலாம்.

தேங்காய்ப்பால் கோழிக்கறி ரெடி!

Check Also

காதலனை துண்டு துண்டாக வெட்டி சாத்தானுக்கு பலி கொடுத்த காதலி

ரஷ்யாவில் உள்ள ஒர்யோல் எனும் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது காதலனை கொன்று சாத்தானுக்கு அர்ப்பணித்த சம்பவம் அதிர்ச்சியை …