Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விபத்து – உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விபத்து – உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

கோவை மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகள் இடிந்ததில், சிறுமிகள், பெண்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இன்று காலை பாறைகள் உருண்டு கீழே இருந்த வீடுகள் மீது விழுந்தன.

இதனால், 4 வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்தது. 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்ட பலர் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.

அதிகாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

Check Also

கணவன்

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!14Shares சென்னை வேளச்சேரியில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது …