Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / நித்தியானந்தா மீது வெளியுறவுத்துறையில் புகார்
நித்யானந்தா

நித்தியானந்தா மீது வெளியுறவுத்துறையில் புகார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

தனது மகள்கள் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ள நித்யானந்தாவின் செயலாளர் குடும்பம் தற்போது நீதி கேட்டு மத்திய வெளியுறத்துறை அலுவலகத்தின் கதவுகளை தட்டியுள்ளது.

மறுபக்கம் பெங்களூருவில் பாலியல் வன்கொடுமை புகாரை காவல்துறை கையில் எடுத்துள்ளது.

வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார் என்று குஜராத் போலீசாரால் அறிவிக்கப்பட்ட நிலையில், நித்யானந்தாவுக்கு எதிராக தொடர்ந்து புகார் மீது புகார் அளிக்கப்பட்டுவருகிறது. குஜராத் அஹமதாபாத் ஆசிரம குருகுலத்தில் தங்கி படித்துவந்த மகள்களை காணவில்லை என்று நித்யானந்தாவின் முன்னாள் செயலாளர் ஜனார்த்தன் சர்மா புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார், நித்யானந்தா ஆசிரம பெண் நிர்வாகிகள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆசிரமத்தில் நடந்த சோதனையில் ஏராளமான கனிணிகள், லேப்டாப்கள், செல்போன்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலக அதிகாரிகளை சந்தித்து, ஜனார்த்தனன் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்த்தனன் சர்மாவின் மனைவி புவனேஸ்வரி நித்யானந்தாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தகவல் சொல்லாமல், தனது மகளை வெளிநாட்டு அழைத்துச் சென்றதை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று புவனேஸ்வரி கேள்வி எழுப்புகிறார்.

இந்த நிலையில், நித்யானந்தாவின் முன்னாள் சிஷ்யையான கனடா நாட்டைச் சேர்ந்த சாரா லாண்ட்ரி, நித்யானந்தா தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக பெங்களூரு போலீசில் புகாரளித்துள்ளார்.

காமசூத்ரா புகைப்படங்களை அனுப்பி தன்னை வசப்படுத்த முயன்றதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஆன்மீககத்தின் பெயரால் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இளம்பெண்கள் நித்யானந்தாவின் பாலியல் இச்சைக்குப் பலியாக்கப்பட்டதாகவும் பரபரப்பு புகார்களை அடுக்கியுள்ளார்.

மோகன்தாஸ் பை என்பவருடன் சேர்ந்து தன்னை ஆன்மீக ஆராய்ச்சியில் நித்யானந்தா ஈடுபடச்சொன்னதாக சாரா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அவரது குற்றச்சட்டுகளை மோகன்தாஸ் பை மறுத்துள்ளார்.

”அவர் கூறியது உண்மையல்ல. நித்யானந்தா விஷயத்தில் என்ன நடந்தது என்பது போலீஸ் விசாரணை நடத்தி கண்டுபிடிக்கும். நான் அவரை இரண்டு, மூன்று முறை சந்தித்துள்ளேன்.

என் நண்பர் அங்கே ஏதோ படிப்பதற்காக வந்திருந்தார். அப்போது நித்தியானந்தாவை சந்தித்து நேர்காணல் செய்தேன். அவர் ஏராளமான விஷங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அவ்வளவுதான் எங்கள் தொடர்பு. அந்த பெண் கூறியது எதுவும் உண்மையில்லை” என்று மோகன்தாஸ் பை தெரிவித்துள்ளார்.

சாராவின் புகாரில் சொல்லப்பட்ட சம்பவங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தாக சொல்லப்படும் நிலையில், வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறாதா என பெங்களூரு போலீசார் சட்ட ரீதியில் ஆய்வு செய்துவருகிறார்கள்.

இரண்டு விவகாரங்களையும் நித்தியானந்தா சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரைக்கும் தான் எங்கிருக்கிறேன்?

கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட சிறுமிகளுக்கும் தனக்கும் என்ன தொடர்பு? என்பது குறித்து வெளிப்படையாக நித்யானந்தா அறிவிக்கவில்லை.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

Check Also

கடலூரில்

கடலூரில் கூவிக்கூவி பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!10Shares கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்று பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது மீண்டும் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. …