Breaking News
யுத்தம் நிறைவு

யுத்தம் நிறைவு செய்யப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு

யுத்தம் நிறைவு செய்யப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு

நாட்டின் யுத்தம் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இன்று 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இறுதி யுத்ததின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து தமிழ் மக்கள் ஒரு வாரகாலமாக அனுஷ்டிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று பிரதான நினைவு தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அறிவித்துள்ளது .

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை துக்க தினமாக அனுஷ்டிக்க உள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது பொதுக்கட்டமைப்பினை சேர்ந்த அருட் தந்தை லியோ ஆம்ஸ் ரோங் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் மூலம் விடுக்கப்பட்ட அறிவித்தலில் படி இன்றையதினம் குறித்த நேரத்துக்கு உரிய ஒழுங்குமுறையின் படி நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இன்று முற்பகல் 10.30 அளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில், அகவணக்கம், பொதுச்சுடர் ஏற்றல், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரகடனம், மலர் அஞ்சலி போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி மரணித்தவர்களை நினைவு கூர்ந்து இந்த அனுஷ்டிப்புகள் இடம்பெறுகின்றன.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் ஒன்று கூடுவதற்கு முடியாத சூழ்நிலை காணப்படுவதனால் தத்தமது வீடுகளில் இருந்தே இந்த தினத்தை அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மாலை 6 மணி 18 நிமிடமாகும் போது மக்கள் தத்தமது வீடுகளில் விளக்குகளை ஏற்றி அனுஷ்டிக்குமாறு வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

இதேவேளை இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களின் ஆத்மா சாந்திக்காக தமிழ் மக்கள் தத்தமது வீடுகளில் அமைதியான முறையில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யுமாறு தமிழர் விடுதலை கூட்டணி கோரியுள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்றை தினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட் 11 பேரை வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமையகப் காவற்துறை பொறுப்பதிகாரி நீதிமன்றில் முன்வைத்த மனுவிற்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட 11 பேருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நேற்றைய தினம் குருநகர், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தமிழாராச்சி மாநாட்டு நினைவிடம் ஆகிய இடங்களில் நேற்று அஞ்சலிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நிகழ்வுகளை நடத்தியமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 நாட்களின் பின்னர் அவர்கள் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 11 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவுகஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 11 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …