Breaking News

கணினிமயமான மொய் விருந்து: 2கோடி வரை வசூல்!

தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் மொய் விருந்து விழா, கணினி மயமாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம், காதணி போன்ற விழாக்களில் மொய் செய்யும் முறையானது வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், கொத்தமங்கம், அணவயல் உள்ளிட்ட பகுதியில் மொய் விருந்து விழா எனும் பிரத்தியேக விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆடி மாதத்தில், சுமார் 20 பேர் சேர்ந்து ஒரே இடத்தில் நடத்தப்படும் இவ்விழாவில் அதிகபட்சமாக ஒரு டன் வரை ஆட்டுக் கறி சமைத்து அசைவ உணவு பரிமாறப்படுகிறது.

இப்பகுதியில் தனி நபருக்கு அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை மொய் வசூலாகி உள்ளது. சுமார் 25 ஆயிரம் பேர் மொய் வரவு- செலவு வைத்துள்ள இப்பகுதியில், நிகழாண்டில் சுமார் 2 ஆயிரம் பேர் மொய் விருந்து விழா நடத்த உள்ளனர்.

மொய் விருந்தில் பணம் எண்ணும் மிஷின்கள் பயன்படுத்துவது, வங்கி அலுவலர்களை வரவழைத்து பணியை எளிதாக்கிக்கொள்வது போன்ற நடைமுறைகள் கடந்த ஆண்டு பின்பற்றப்பட்டது. இந்நிலையில், நிகழாண்டு முதன் முறையாகப் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பெரியாளூரில் நேற்று நடைபெற்ற மொய் விருந்து விழாவில் கணினி மூலம் மொய் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதன் மூலம் மொய் பதிவு செய்தோருக்கு ரசீது கொடுத்ததுடன் அவர்களின் செல்போன் எண்ணுக்குக் குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. மொய் எழுதுவதில் ஏற்படும் தாமதம் இம்முறையில் தவிர்க்கப் பட்டு, விரைவாக மொய் பதிவு செய்யப்படுவதால் இத் தொழில்நுட்பத்தை மக்கள் வரவேற்றுள்ளனர்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …