Breaking News
கருணாநிதி உடல்நிலை குறித்து கவலை

கருணாநிதி உடல்நிலை குறித்து கவலை: திமுக நிர்வாகி உயிரிழப்பு?

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலையில் இருந்த திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு டிரக்கியாஸ்டமி குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டது.

இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மீண்டும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இரு தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டது.

இந்த தகவல் பரவியதும் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கோபாலபுரம் இல்லம் முன்பு திரண்டு வருகின்றனர்.

அதேபோல், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோபாலபுரம் இல்லம் வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.

இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி நேற்று நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.

ரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலையில் இருந்த திருவாரூர் மாவட்ட திமுக நிர்வாகி முத்துப்பேட்டை தமீம் (50) என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …