Breaking News
திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க ராகுல் சென்னை வருகை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வரவுள்ளார்.

உடல் நலிவு ஏற்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் நான்காவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

காவேரி மருத்துவமனைக்கு வெளியே இரவு பகலாக காத்திருக்கும் திமுக தொண்டர்கள் கருணாநிதி விரைவில் நலம் பெற்று மீண்டு வரும் பொருட்டு எழுந்து வா தலைவா!! எழுந்து வா தலைவா!! என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

அதேசமயம், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை வரவுள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் உறுதிபடுத்தியுள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …