முக்கிய செய்திகள்

குக்கரில் சமைப்பதால் இதய நோய் வருமா??

குக்கரில் சமைத்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் வர வாய்ப்புள்ளதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இப்பொழுதெல்லாம் பெரும்பாலான வீடுகளில், குக்கரில் தான் அரிசி, சாம்பார், குழம்பு ஆகியவைகளை சமைத்து சாப்பிடுகிறோம். இது ஒரு எளிமையான முறை என்பதால், குக்கரில் சமைப்பதையே விரும்புகின்றனர்.

இந்நிலையில் குக்கரில் சமைப்பது ஆரோக்கியம் இல்லை எனவும், இதனால் இதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இதய நோய் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதனை தடுக்க முதலில் குக்கரில் சமைத்து சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் எனவும், குக்கர் வருவதற்கு முன்பு சாதத்தை எப்படி வடித்து சாப்பிடுவோமோ அதே போல் தான் சாப்பிட வேண்டும் எனவும் ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் கே.கண்ணன் கூறுகிறார்.

மேலும் குக்கரில் சமைப்பதால் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் நமக்கு கிடைக்காமல் போவதால், நமது ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிறது எனவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் தர்ஷன்

Tags
Show More

Related Articles

Back to top button
Close