Breaking News
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி

தமிழகத்தில் 19,372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 145 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,304 ஆக உள்ளது.

கொரோனாவால், கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர், ஐஐடி ஊழியர் ஒருவர் உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள். திருவொற்றியூரை சேர்ந்த 34 வயது ஆண், வியாசர்பாடியை சேர்ந்த 45 வயது ஆண் , பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 68 வயது முதியவர், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 77 வயது முதியவர் என 4 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோடம்பாக்கம் – 1646 பேர்

தேனாம்பேட்டை – 1412 பேர்

திரு.வி.க நகர் – 1393 பேர்

தண்டையார்பேட்டை – 1322 பேர்

அண்ணாநகர் – 1089 பேர்

நாடு திரும்பிய 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்

About அருள்

Check Also

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, …