Breaking News

நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவில் 30 மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அங்கு இந்த நோயால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் அட்லாண்டா நகரில் உள்ள மத்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அதிபர் டிரம்ப் சென்று, பார்வையிட்டார்.

அங்குள்ள மருத்துவர்களிடம் கொரோனா எவ்வாறு பரவி வருகிறது, தடுப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூயார்க் மாகாணத்தில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, கலிபோர்னியா, ஹவாய் ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொரோனா தாக்குதல் காரணமாக சான் பிரான்சிஸ்கோ நகரில் தனிமைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிராண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருக்கும் பயணிகள் அனைவரும் கப்பலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) இறங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

2,400 பயணிகள் மற்றும் 1,100 ஊழியர்களுடன் வந்த இந்த கப்பலில் இதுவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …