Breaking News
இந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

இந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

இந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 70 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 70,53,807 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 918 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60,77,977 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,67,496 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆமை வேகத்தில் சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி!

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …