Breaking News
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 63 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,137 ஆண்கள், 2,648 பெண்கள் என 6,785 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 307 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 867 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,299 பேரும், விருதுநகரில் 424 பேரும், செங்கல்பட்டில் 419 பேரும், குறைந்தபட்சமாக திருப்பூரில் 18 பேரும், கரூரில் 5 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 21 லட்சத்து 38 ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 389 ஆண்களும், 78 ஆயிரத்து 337 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 23 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்கு உடட்ட 10 ஆயிரத்து 6 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 24 ஆயிரத்து 748 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 66 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேரும் என 88 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 22 பேரும், மதுரையில் 10 பேரும், விருதுநகரில் 6 பேரும், திருவள்ளூர், கன்னியாகுமரியில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, கோவை, காஞ்சீபுரம், நெல்லையில் தலா 4 பேரும், திண்டுக்கல், ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், திருவண்ணாமலை, தேனி, தென்காசியில் தலா இருவரும், அரியலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி, வேலூரில் தலா ஒருவரும் என 26 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் 3,320 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 504 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் சென்னையில் 1,110 பேரும், காஞ்சீபுரத்தில் 609 பேரும், திண்டுக்கலில் 479 பேரும் அடங்குவர். இதுவரையில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 297 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 53 ஆயிரத்து 132 பேர் உள்ளனர்.

பயணிகள் விமானம் அருகே பறந்த அமெரிக்க போர் விமானம்

About அருள்

Check Also

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 569 பேருக்கு , வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், …