Breaking News
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா  தொற்று அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா  தொற்று அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா  தொற்று அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா  தொற்றுக்கள் கடந்த வாரம் வரையிலும் வெகுவாக குறைந்து வந்த நிலையில், தற்போது வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எதிர்வரும் நாட்களிலும் இதே நிலை தொடர்ந்தால் தேசிய சுத்திகரிப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அமீரக அரசு எச்சரித்துள்ளது.

அமீரகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை 210 ஆக பதிவாகிய நிலையில் , திங்கள்கிழமை 229 ஆகவும், செவ்வாய்க்கிழமை 365 ஆகவும், புதன்கிழமை 435 ஆகவும் மற்றும் வியாழக்கிழமை 461 ஆகவும் அதிகரித்துக்கொண்டே வருவதனால், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அமீரகத்தின் தேசிய நெருக்கடி மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றால் அமீரகத்தின் சில பகுதிகளில் தேசிய சுத்திகரிப்பு திட்டம் மீண்டும் திரும்பக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …