Breaking News
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்புபுதிதாக 4965 பேர் பாதிப்பு: 75 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்புபுதிதாக 4965 பேர் பாதிப்பு: 75 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்புபுதிதாக 4965 பேர் பாதிப்பு: 75 பேர் சாவு

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 50 ஆயிரத்து 55 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,010 ஆண்கள், 1,955 பெண்கள் என 4,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 22 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 56 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 252 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 650 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,130 பேர், திருவள்ளூரில் 366 பேர், விருதுநகரில் 360 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 6 பேரும், ஈரோட்டில் 3 பேரும், நீலகிரியில் இருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 19 லட்சத்து 56 ஆயிரத்து 672 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 643 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 48 பேரும், தனியார் மருத்துவமனையில் 27 பேரும் என 75 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 21 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூர், திருச்சியில் தலா 6 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், தேனியில் 4 பேரும், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூரில் தலா 3 பெரும், ராமநாதபுரம், காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூரில் தலா இருவரும், கடலூர், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தூத்துக்குடி, நெல்லையில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் 2,626 பேர் உயிரிழந்துள்ளனர்.

4,849 பேர் ‘டிஸ்சார்ஜ்’கொரோனா பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 849 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் சென்னையில் 1,298 பேரும், ராமநாதபுரத்தில் 356 பேரும், திருவள்ளூரில் 325 பேரும் அடங்குவர். இதுவரையில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 51 ஆயிரத்து 344 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 717 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 458 பேரும், ரெயில் மூலம் வந்த 424 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 288 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 921 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தாண்டியது

About அருள்

Check Also

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார் பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்து முதலமைச்சரே ஆய்வு நடத்தி இறுதி …