Breaking News
தமிழகத்தில் கொரோனா தொற்று 2 லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கொரோனா தொற்று 2 லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கொரோனா தொற்று 2 லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் ஒரே நாளில் 60 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,933 ஆண்கள், 2,539 பெண்கள் என 6,472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 40 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 342 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 809 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,336 பேர் பாதிக்கப்பட்டனர். சென்னையில் இதுவரையில் 90,900 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகரில் 480 பேரும், திருவள்ளூரில் 416 பேரும், தூத்துக்குடியில் 415 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேரும், நாகபட்டினத்தில் 4 பேரும், திருவாரூரில் ஒருவரும் நேற்றைய பாதிப்பு பட்டியலில் இடம் பெற்றனர். தமிழகத்தில் இதுவரை 20 லட்சத்து 75 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 63 பேரும், தனியார் மருத்துவமனையில் 25 பேரும் என 88 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதில் சென்னையில் 11 பேரும், மதுரை, திருவள்ளூரில் தலா 8 பேரும், கோவை, திண்டுக்கல், திருச்சியில் தலா 6 பேரும், காஞ்சீபுரத்தில் 5 பேரும், செங்கல்பட்டு, தென்காசியில் தலா 4 பேரும், விருதுநகர், வேலூர், நெல்லை, கடலூர், திருவண்ணாமலை, தேனியில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, விழுப்புரத்தில் தலா 2 பேரும், திருப்பூர், தஞ்சாவூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்ண கிரியில் தலா ஒருவரும் என 25 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தற்போது கொரோனா உயிரிழப்பு 3,232 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 210 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் சென்னையில் 1,703 பேரும், மதுரையில் 450 பேரும், விருதுநகரில் 312 பேரும் அடங்குவர். இதுவரையில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 793 பேர் குணம் அடைந்து உள்ளனர். 52 ஆயிரத்து 939 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 751 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 468 பேரும், ரெயில் மூலம் வந்த 424 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 367 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 5 ஆயிரத்து 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனாவுக்கு எதிராக மத்தியஅரசின் சில புதிய வர்த்தக விதிகள்

About அருள்

Check Also

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, …