Breaking News
நாட்டில் நேற்றைய தினம் 124 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் நேற்றைய தினம் 124 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் நேற்றைய தினம் 124 பேருக்கு கொரோனா தொற்று

இதற்கமைய மினுவாங்கொடை கொத்தணியில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர்களில் தனிமைப்படுத்தலில் இருந்த 87 பேருக்கும் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 34 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் ஓமானில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரையில் ஆயிரத்து 307 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் தொற்றுறுதியான மூவாயிரத்து 307 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் தொற்றுறுதியான ஆயிரத்து 432 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை மன்னாரில் மேலும் 3 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.

கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் 243 பேருக்கான பீ.சீ. ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் பெரியகடை மற்றும் பட்டிதோட்டம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் குறிப்பிட்டார்.

இதேவேளை, முககவசம் அணிதல், ஒரு மீற்றர் சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்து 6 மாத காலம் விளக்கமறியலில் வைக்ககூடிய வகையில் வர்த்தமானியை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று அல்லது நாளைய தினத்துக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டிரம்பால் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் இல்லை வெள்ளை மாளிகை

About அருள்

Check Also

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020)

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020)

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020) இன்றைய ராசிப்பலன் …