Breaking News

கொரோனா சீன ஆய்வுகூடத்திலிருந்து உருவானதற்கான ஆதாரம் உள்ளது

கொரோனா சீன ஆய்வுகூடத்திலிருந்து உருவானதற்கான ஆதாரம் உள்ளது

கொரோனா கிருமி சீன ஆய்வுகூடத்திலிருந்தே உருவானதற்கான ஆதராம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தனது சொந்த புலனாய்வுப் பிரிவினரையே அவர் குறைத்து மதிப்பிடுவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

வெள்ளை மாளிகையில் வைத்து வியாழனன்று ஊடகவியலாளர் ஒருவர், “வுஹான் கிருமி மற்றும் தொற்றுநோயியில் கலாசாலை பரிசோதனைக் கூடத்திலிருந்துதான் இந்தக் கிருமி உருவானது என்ற நம்பக்கூடிய ஏதும் உங்கள் பார்வையில் தெரிகின்றதா என்று கேட்டபோத” ‘ஆம், என்னிடம் உள்ளது, ஆம், என்னிடம் உள்ளது’ ஜனாதிபதி எதனையும் குறிப்பிடாமலேயே இதனைத் தெரிவித்தார்.

‘உலக சுகாதார ஸ்தாபனம் தங்களைக் குறித்து வெட்கப்படவேண்டும் என நான் கருதுகின்றேன். ஏனெனில் அவர்கள் சீனாவின் பொது உறவுகள் முகவர் நிறுவனம் போன்றவர்கள்’ என்றார்.

பின்னர் அவரது கருத்தை தெளிவுபடுத்துமாறு கோரப்பட்டபோது, ‘என்னால் அதனைக் கூறமுடியாது. அதனைக் கூற எனக்கு அனுமதி இல்லை’ என பதிலளித்தார்.

‘அவர்கள் (சினா) தவறு செய்தார்களா அல்லது அது தவறுதலாக உருவானதா, அதன் பின்னர் இன்னுமொன்றை செய்தார்களா அல்லது எவரேனும் வேண்மென்றே எதையாவது செய்தார்களா?’ என ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார்.

‘சீனாவின் ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கு எவ்வாறு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது, எவ்வாறு பொது மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டது என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால், அவர்கள் உலகின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அது ஒரு மோசமான விடயம். இது அவர்களால் பதிலளிக்கவேண்டிய மிகவும் கடினமான கேள்வியாகும்’ என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, வுஹான் பரிசோதனை கூடத்திலிருந்தா இந்தக் கிருமி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரிடம் வெள்;ளை மாளிகை அதிகாரிகள் வியாழனன்று கேட்டுக்கொண்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், சீனாவும் உலக சுகதார ஸ்தாபனமும் கிருமி பற்றிய ஆரம்பக்கட்டத் தகவல்களை வெளியிடுவதை தடுத்த நிறுத்தினவா என்பதைக் கண்டறியுமாறு புலனாய்வுப் பிரிவினர் பணிக்கப்பட்டுள்ளதாகவும் பெயர்குறிப்பிடாத அதிகாரிகள் என்.பி.சி. செய்திக்கு புதனன்று தெரிவித்திருந்தனர்.

இந்தக் கிருமி எவ்வாறு பரவியது என்பது தொடர்பாக இன்னும் புலனாய்வு செய்துவருவதாக இதற்கு முன்னர் அமெரிக்க புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும் கொவிட் – 19 மனிதனால் உருவாக்கப்படவோ அல்லது மரபணு மாற்றம் மூலம் உருவாக்கப்படவோ இல்லை என்ற தீர்மானத்துக்கு வந்ததாக அந்த அலுவலகம் குறிப்பிட்டது.

ஆய்வுகூட கருதுகோளை நிராகரித்துள்ள சீனா, கொவிட் – 19 தொடர்பான அமெரிக்காவின் பதிலை விமர்சித்துள்ளது.வுஹானில் கடந்த வருடம் பிற்பகுதியில் கொரோனா கிருமி பரவ ஆரம்பித்ததிலிருந்து இற்றைவரை உலகம் முழுவதும் 32 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 230,000க்கும் மெற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

பொது வெளியில் தோன்றிய கிம் ஜான் உன்!பொது வெளியில் தோன்றிய கிம் ஜான் உன்!

கொரோனா வைரஸ் பரவல்கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை!கொரோனா வைரஸ் பரவல்கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை!

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …