தமிழ் கவிதைகள்முக்கிய செய்திகள்

வைத்தியசாலையில் இருந்து கொரனோதொற்று சிறுமி கொரனோ வைரசுக்கு எழுதிய மடல்

வைத்தியசாலையில் இருந்து கொரனோதொற்று சிறுமி கொரனோ வைரசுக்கு எழுதிய மடல்

கொரணாவே
உன்னோடு முரண்பட
எனக்கு விருப்பமில்லை

உன்னோடு சிலமணிநேரம்
பேச விரும்புகின்றேன்..

எனக்கு வைத்தியராக
வரவேண்டும் என்ற
கனவு இருக்கிறது

பிரமன் எம்மை
படைத்தார்
நாம் வாழ்வதற்க்கு என்று..
ஏன்?
வைரஸ்சாய் வந்து
அழிக்கிறாய்..

நாம் வசதியானவர்கள் அல்லர்
ஏழ்மையோடும் சந்தோசமாக
வாழ நினைப்பவர்கள்

இப்படி நீ எங்கள் மண்ணில்
தாண்டவமாடுவாய்
என்று நினைத்திருந்தால் அன்றே
கடவுளிடம் கேட்டிருப்போம்

மனித பிறப்பே
வேண்டாம் என்று..
எனக்கு சாவதற்க்கு பயமில்லை
ஆனால் எந்தன் தேசத்தில்
இருக்கின்ற தம்பி,தங்கைச்சிகளை
நினைத்துதான்
கவலைப்படுகின்றேன்..

கொரணாவே
உன்னிடம் மண்டியிட்டுக் கேட்கின்றேன்..
இந்து வையகத்தில் இருந்து
மறைந்துவிடு.
வையகத்தை மறைத்துவிடாதே..

சுழலும் பூமி பந்தை
நிறுத்திவிடாதே..

துப்பாக்கி சன்னங்களும்
குண்டு சிதறல்களும்
சிதறடித்த நிலத்தில் நீயுமா
எம்மை சிதறடிக்கப்
பார்க்கின்றாய்?

அழகான பூமியில்
வாழ ஆசைப்படுகின்றேன்
ஓடி விளையாட
பாடிகளித்திட
ஊர் சுற்றிதிரிய எவ்வளவு விருப்பம்…?

என் உள்ளக்கிடக்கையை
புரிந்துகொள்
பூமியில் இருந்து மறைந்துவிடு
குழந்தை பூக்கள் சந்தோசமாய்
மலர்வதற்க்கு..

ஆ.முல்லைதிவ்யன்

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close