Breaking News
தமிழகத்தில் 6000 த்தைக் கடந்த கொரோனா தொற்று

தமிழகத்தில் 6000 த்தைக் கடந்த கொரோனா தொற்று

தமிழகத்தில் 6000 த்தைக் கடந்த கொரோனா தொற்று

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘ஐ.சி.எம்.ஆரின் அறிவுரைப்படியே கொரோனா அறிகுறி இல்லாதவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீடுகளில் கழிவறைகளுடன் கூடிய தனியறை இருக்கிறதா? என்று கேட்டு உரிய சோதனைகள் செய்யப்பட்டபிறகு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இன்று மட்டும் 13,980 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருவர், நெல்லையில் ஒருவர் என்று மூன்று பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

அதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படுத்த வேண்டாம்.

கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு சிறப்பான சிகிச்சை அளித்துவருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சிறுநீரக, சுவாச கோளாறு பிரச்னைகள் இருப்பவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

இந்திய அளவில் மிக அதிக சோதனைகள் செய்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.68 சதவீதமாகவே உள்ளது’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவு!தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவு!

About அருள்

Check Also

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக நம்பாதீர்கள் - போரிஸ் ஜான்சன்

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக நம்பாதீர்கள் – போரிஸ் ஜான்சன்

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக நம்பாதீர்கள் – போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பு மருத்தின் உற்பத்தி நமது வாழ்க்கையை இயல்பு …