Breaking News

இலங்கையில் கொரோனா நிலவரங்கள் – Corona situation in Sri Lanka

இலங்கையில் கொரோனா நிலவரங்கள் – Corona situation in Sri Lanka

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் எழுவர் இன்று (24.04.2020) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 116 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை 420 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் 297 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்த் தொற்று சந்தேகத்தில் 247 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ளார்கள்.

அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 பேருக்கு பரவலாம்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து, மேலும் 10 பேருக்கு நோய் பரப்பக்கூடிய தன்மை உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பொறளை மருத்துவ ஆய்வு நிறுவகனத்தின் பணிப்பாளரான, மருத்துவர் ஜயருவன் பணடார இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நேற்றிரவு வரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களி;ன் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி

இலங்கையில் பரவி வரும் கொரோனா தொற்றானது அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் பரவிவரும் வைரஸ் மாதிரியை ஒத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் குழாமால் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கிம் ஜாங் சகோதரி ஆட்சிக்கு வந்தால் முந்தைய ஆட்சியை விட கொடூரமாக இருக்கும்

மூன்றாம் உலகப் போரை தொடுத்து உள்ளது சீனா

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …