தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது

அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது

கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட இருக்கின்றன.

இதனால் நேற்று முதலே மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி வருகின்றனர்.

மக்கள் வெளியேற கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் வீடற்ற, ஆதரவற்ற மக்களின் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது. தமிழக மக்களுக்கு நிவாரண பணிகளை அறிவித்துள்ள நிலையில் ஆதரவற்ற மக்களுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

மாவட்டங்கள் முழுவதும் பொது சமையற்கூடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சூடான, சுகாதாரமான உணவை ஆதரவற்றோர்களுக்கு அவரவர் வாழும் இடங்களுக்கே சென்று வழங்க ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துரிதப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

கொரோனா மிகவும் வேகமாக பரவுகிறது. மக்களின் நலன் கருதி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும். பயணத்தை தவிர்க்கவும்.

பல்வேறு நோய்கள் ஏற்கனவே இருந்தாலும் மதுரையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு பேரவையில் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். முதல்-அமைச்சர் பழனிசாமி, சபாநாயகர் தனபால் மற்ற எம்.எல்.ஏக்கள் கரொவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

நோர்வேயின் கொரோனா வைரஸ்: காலை நிலவரப்படி | Corona Infection Norway Updates -24-03-2020

பிரான்சில் கொரோனா வைரஸ்: இன்று காலை நிலவரப்படி | Corona Infection France Updates -24-03-2020

இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close