Breaking News
ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், சவூதி அரேபியா - கொரோனா நிலவரங்கள்

ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், சவூதி அரேபியா – கொரோனா நிலவரங்கள்

ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், சவூதி அரேபியா – கொரோனா நிலவரங்கள்

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 435 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 65,341 ஆக உயர்ந்துள்ளது.

அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 367 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேன்றைய நாளில் மட்டும் 113 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 58,022 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

ஓமானில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 188 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதன் மூலம் ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 83,606 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 603 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 78,188 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

குவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 675 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம்  தெரிவித்துள்ளது இதன் மூலம் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 78,145 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 507 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்றைய நாளில் மட்டும் 528 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 69,771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …